உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி பெயரை நீக்குகிறோம் என கருணாநிதி பெயர் திணிப்பு

ஜாதி பெயரை நீக்குகிறோம் என கருணாநிதி பெயர் திணிப்பு

சென்னை: 'ஜாதி பெயரை நீக்குகிறோம் என்று கூறி, கருணாநிதி பெயர் திணிக்கப்படுகிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: உள்ளாட்சி பகுதிகளில், ஜாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டு, மாற்று பெயர்களை வைக்க, சில எடுத்துக்காட்டுகளை வழங்கி உள்ளனர். அதில், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்ற தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன்? அவர்களை, பட்டியல் சமூக தலைவர்களாக மட்டுமே தி.மு.க., அரசு பார்க்கிறதா? அந்த பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என பார்த்தால், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி பெயர் உள்ளது. தனக்கு தானே சிலை வைப்பது, தனக்கு தானே டாக்டர் பட்டம் கொடுப்பது என, கருணாநிதி செய்த நகைச்சுவைகள் ஏராளம். இப்போது, பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, கருணாநிதியையே மிஞ்சி கொண்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே, உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப் பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்? ஜாதி பெயரை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய கருணாநிதி பெயரை திணிக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை