உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜயிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜயிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் கேட்டறிந்தார்.கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இன்று 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=14l8s505&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், எம்பியுமான ராகுல் தொலைபேசியில் பேசி இருந்தார். அதேபோல் தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை