உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பே, சிபிஐ தான் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பே, சிபிஐ தான் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பே, மக்களுக்கு உண்மை நிலை தெரிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ldr74qdu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்திற்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி. நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே. என்ன அவதூறு பரவியது?உங்கள் கட்சிக் காரர்கள், 'தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா?உங்கள் அரசின் காவல்துறை பிரசாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது, இவை எல்லாம் வதந்தியா?பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே, அதுவா?அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே, அதுவா?கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?சென்னை ஏர் ஷோவை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே, அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் அவர்களே... க்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள். இவ்வாறு அதில் இபிஎஸ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மணிமுருகன்
செப் 30, 2025 00:19

அருமை ஒருமுறை கேடுகெட்ட அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பரமோக ஊழல்கட்சி திமுகா கூட்டணிக்கு ஒப்பாரி வைத்துவிட்டால் கொத்தடுமைதான் என்பதற்கு கரூர் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது கேடுகெட்ட கூட்டத்தின் நடவடிக்கையில் இருந்தே தெரிகிறது இது மக்களை பயங்காட்ட நடத்தப்பட்ட நிகழ்வு மக்களை காவு கொடுத்துள்ளார்கள் 3 மணி என்றவர்கள் ஏன் 7 மணிவரை இழுத்தார்கள் கூட்டம் சேர்க்கிறது குறுகொய இடம் என்றால் கட்டிப்படுத்த வேண்டிொயது யாருடைய கடமை கரூர் சம்பவம் அடுத்த திருப்புவனம்தலைவர் ரஜினிகாந்த் ரசிக சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆர்வக் கோலாறுல போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் கேடுகெட்டக்கூட்டத்திற்கு தெரியும் எச்சரிக்கை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 29, 2025 23:43

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?


Prabu
செப் 29, 2025 23:06

41 children, women & men are dead. Nobody will take on Actor Vijay directly. Nobody will attack Actor Vijay directly. Nobody will question Actor Vijay directly. Why? Because nobody wants to anger his base or burn potential bridges before TN election.


V K
செப் 29, 2025 22:52

அது ஒரு நபர் விசாரணை ஆணையம் இல்லை அது தி முக நபர் விசாரணை ஆணையம்


rama adhavan
செப் 29, 2025 20:50

அருமையான கருத்து. ஆனால் இவை ஓட்டாக மாறாது. உங்களால் நீக்கப்பட்ட உங்கள் கட்சி தலைவர்களை உடன் ஒன்று இணைக்கவும். அப்போது தான் அதிமுக மீண்டும் 2026இல் அரியணை ஏற முடியும். இல்லை எனில் ஆட்சி எட்டாக் கனி தான். நிலைமை இலவு காத்த கிளி தான்.


S.L.Narasimman
செப் 29, 2025 19:37

பொம்மை முதல் மந்திரி மாதிரி பொம்மை விசாரணை கமிசன். இத்தனை எளிய பாவபட்ட மக்கள் இறந்திருக்கார்கள். துணை முதல்வர் துபாய்க்கு உல்லாச பயணமாம்.


Mariadoss E
செப் 29, 2025 19:01

பிஜேபி யை வச்சி விளையாடலாம் அப்பிடின்னு திட்டமா?


Mariadoss E
செப் 29, 2025 18:59

உங்க ஆட்சியில் போட்ட ஒவ்வொரு தனிநபர் விசாரணை ஆணையமும் இப்படி கண்துடைப்பா? உண்மையை உரக்க சொல்லும்


Kjp
செப் 29, 2025 19:12

அப்படின்னா எடப்பாடி செய்ததை எல்லாம் நீங்களும் செய்கீறீர்கள்.என்று ஒப்புக் கொள்கிறீர்களா? கள்ளச்சாராய .சாவுக்கு பொங்கி எழுதாத அமைச்சர் படை கரூர் சம்பவத்திற்கு படு வேகமாக இறங்கி இருக்கிறார்களே.


V Venkatachalam
செப் 29, 2025 20:14

தீ ,மு.க காரன்களில் ஒரே ஒருத்தனை நல்லவன்னு கை காட்ட முடியுமா? ஆனா ஈ பி எஸ் ஏதாவது சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானுங்க.அதை விட ஜோக் என்னான்னா ரூவா 200 இ.உ.பீஸ் ங்க குதிக்குறது இருக்கே பூமியே உடஞ்சி விழுந்துடும். அப்புடி குதிப்பானுங்க.


sampath, k
செப் 29, 2025 18:47

For each and every issues, dont require CBI enquiry. First of all, believe our state police personnel, not only in your ruling period. They are still in servicing. Unnecessary, dont blame them they are not qualified and extending their sincere services to the state.


Balaa
செப் 29, 2025 18:36

சரியான பதிவு. ஏன் உதயநிதியால் துபாய் பயணத்தை ரத்து செய்து, பொறுப்பான துணை முதல்வராக இங்கு நிவாரண நடவடிக்கையை மேற்பார்வையிடலாமே.


முக்கிய வீடியோ