உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிரிழந்த 40 பேர் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு!

உயிரிழந்த 40 பேர் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு!

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் பலியான 40 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று (செப் 29) அதிகாலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவர், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது: கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது. இனிமேல் இது போன்று விபத்துக்கள் நடக்கக் கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60fatjx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒப்படைப்பு

கரூரில் பலியான 40 பேரில், 30 பேரது உடல்கள் இன்று காலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்த 40 பேரில் 32 பேர் கரூரை சேர்ந்தவர்கள். இது பேரிழப்பு. அரசு சார்பில் என்னென்ன செய்ய முடியுமோ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் தனித்தனியாகப் பேசியுள்ளேன். இங்கு கரூர் மற்றும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் என மொத்தம் 345 பேர் பணிகளில் உள்ளனர். இனிமேல் இதுபோல் விபத்துகள் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

நடவடிக்கை

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கொடுக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் முதல்வர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார். இபிஎஸ் ஏற்கனவே அதே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். டிஜிபி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். யார் மீதும் தவறு என்று அரசியல் பேச விரும்பவில்லை.மக்களைச் சந்திப்பது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உள்ள உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், ஒவ்வோரு கூட்டத்திற்கு எவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

2,3 கேள்விகள்

கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு. உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும். சில விஷயங்களை செய்யாதீர்கள், மரத்தின் மீது ஏறாதீர்கள், மக்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். இதற்கு மேல் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சம்மந்தப்பட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்டத் தலைவர்களின் பொறுப்பு. வாரந்தோறும் அவர் (விஜய்) வருகிறார். உங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். தயவு செய்து அவரையும் இரண்டு, மூன்று கேள்வி கேளுங்கள். இவ்வாறு உதயநிதி கூறினார்.மீதம் இருந்த 10 பேர் உடல்களும், மாலை 4 மணிக்கு முன்னதாக உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டன.

திமுக, முதல்வர் நிகழ்ச்சிகள் ரத்து

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கரூர் துயரச்சம்பவம் காரணமாக, ராமநாதபுரத்தில் இன்று நடக்க இருந்த முதல்வர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. நாளை செப் 29ல் ரோடு ஷோ, நாளை மறுநாள் (செப்.,30ல்) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P.sivakumar
செப் 29, 2025 12:39

உண்மையாக தருவாரா?


Kasimani Baskaran
செப் 29, 2025 03:51

திராவிட ஸ்டயில் கொலை. அதன் பின் நடக்கும் நாடகம். இன்னும் வரும்..


பேசும் தமிழன்
செப் 28, 2025 22:41

ஒரு கூத்தாடியை பார்க்கப் போய் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த டாஸ்மாக் டுமிலர்களை என்ன சொல்ல ?.... போங்கப்பா போய் பிள்ளைகளை படிக்க வையுங்கள்..... அவர்களாவது தெளிவு பெறட்டும்.


MARUTHU PANDIAR
செப் 28, 2025 11:57

மக்கள் இப்படி இருந்தால் நடிகன் மட்டுமே தாங்கள் பெற்ற பெரும் பேறு, அவனை நேரில் பார்ப்பது அதை விட பெரும் பேறு என்று பேதலித்து கிடப்பதை பார்க்கிறான். பார்த்து விட்டு பிறகு துணிந்து அரசியல் கட்சி தொடங்குகிறான். இதில் யாரை குறை சொல்வது?


Kumar Kumzi
செப் 28, 2025 11:31

இந்த துயர சம்பவத்தை ஏற்படுத்திவிட்டு துக்கம் ketka போயிட்டிய நீ நடிப்பதில் கிங் டா


MARUTHU PANDIAR
செப் 28, 2025 11:23

என்றைக்கு பா ஜ டெல்லி தலைவர்கள் அண்ணாமலை என்ற இளைஞரை பதவியிலிருந்து மாற்றியதோ அப்போது பிடித்தது தமிழக அரசியலில் கெட்ட காலம். அவர் பின்னால் திரண்ட இளைஞர் கூட்டம் பாதிக்கு மேல் இப்போது ஒரு வெற்று ஹீரோ பின்னால் போய் விட்டார்கள். நஷ்டம் யாருக்கு? அவர்களை இப்போது திரும்ப கொண்டு வர முடியுமா?


MARUTHU PANDIAR
செப் 28, 2025 11:15

இந்த நாட்டில் அரசியலில் புகுந்து ஆட்சியில் அமரும் ஆசைக்கு எந்த தகுதியோ திறமையோ தேவை இல்லை. கூத்தாடியாக இருந்தால் போதும். மக்கள் அவன் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்து அவனைக் நேரில் பார்க்க வேலையை எல்லாம் போட்டு விட்டு பெருங்கூட்டமாக வந்து தவம் கிடக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த நாட்டை உயர்த்த 20 மணி நேரம் உழைக்கும் பிரதமரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?


Raman
செப் 28, 2025 22:31

Well said...cine, tasmac addition beyond repair looks like...these people dont even understand the honesty and hard work put out out by Hon PM. There is something wrong somewhere, fundamentally looks like in our state


MARUTHU PANDIAR
செப் 28, 2025 11:02

முதல் வில்லன் இந்த மக்களின் சினிமா வெறி.கூத்தாடி மோகம். சினிமா நடிகன் என்ன தேவலோகத்திலிருந்து குதித்தவனா? இல்லை இந்த குறிப்பிட்ட ஆளுக்கு அப்படி என்ன பெரிய முக விலாசம் இருக்கு? பேச்சு திறன், உடல் மொழி, தலைமை பண்பு எல்லாம் ஜீரோ. ஆனால் திரையில் ஹீரோ. போலி ஹீரோவை நேரில் பார்ப்பது ஒரு வாழ்நாள் புண்ணியம் என்று எண்ணும் மக்களால் அவர்களுக்கே என்ன லாபம்?