உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயர சம்பவம்: விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கைது

கரூர் துயர சம்பவம்: விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று கைது செய்யப்பட்டார்.கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ryfefjlz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை