உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 லட்சம் பேர் பார்வையிட்ட கீழடி அருங்காட்சியகம்

12 லட்சம் பேர் பார்வையிட்ட கீழடி அருங்காட்சியகம்

சென்னை:சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை, 30 மாதங்களில், 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த 30 மாதங்களில், 12 லட்சம் பேர் அதை பார்வையிட்டுள்ளனர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும், தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு வியப்பதை, திடீர் ஆய்வுக்காக இன்று அங்கு சென்ற போது அறிந்து கொண்டேன். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம், டிசம் ப ரிலேயே மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கி விட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி