உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல்லில் கடத்தப்பட்ட கான்ட்ராக்டர் குத்திக்கொலை

திண்டுக்கல்லில் கடத்தப்பட்ட கான்ட்ராக்டர் குத்திக்கொலை

சாணார்பட்டி:கடத்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி கான்ட்ராக்டர் காரிலேயே குத்திக் கொல்லப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகன், 56. தி.மு.க., அனுதாபியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. இரு தினங்களுக்கு முன் முருகன் கடத்தப்பட்டார். மதுரை, பாலமேடு அருகே இருப்பதை தெரிந்த போலீசார் அங்கு சென்றனர். இதையறிந்த கும்பல் அங்கிருந்து நத்தம் கோபால்பட்டிக்கு காரில் அவரை கடத்தினர். போலீசாரும் பின் தொடர, வழியில் காரில் வைத்தே முருகனை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். சாணார்பட்டி அருகே மணி யக்காரன்பட்டியிலிருந்து ஜோத்தாம்பட்டி செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு, கொலை கும் பல் தப்ப முயன்றது. இவர்களில், திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன், சங்கர், விஜய், சரவணன், ஷேக்பரீத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 08:24

கொலை செய்பவர்களுக்கு இது பொற்காலம் ..கொலைகள் கலைகள் போற்றி பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன... கொலை வளர்ச்சி துறை விரைவில் ஏற்படுத்தப்படும், ஆண்டுதோறும் நிதிஒதுக்கப்படும் , ..கொலைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் ...


raja
ஜூலை 25, 2025 07:22

சட்டமடா ஒழுங்குடா... திருட்டுடா திராவிடம் டா .. மாடல் டா...


Mani . V
ஜூலை 25, 2025 04:43

என்னமோ அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தே அறுத்துத் தள்ளுகிறார் என்று சொன்னார்கள். எல்லாம் பொய்யா கோப்பால்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை