உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்

கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிட்னி முறைகேடு வழக்கில், சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bqbj7ym4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த உத்தரவைக் காரணம் காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். 'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன். சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மணிமுருகன்
நவ 04, 2025 23:15

உயர்நீதி மன்றம் தீர்ப்பு என்பது முக்கியமான ஒன்று அதுவும் பொதுநலம் என்று வரும் போது மக்கள் நலன் கருத்தில் கொள்ள வேண்டும் கிட்னி விற்கப்படுகிறது முறைகேடு என்ற வழக்கை இப்படி கேலிகூத்தாக்குவது நீதிமன்றத்திற்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணிக்கும் தலை குனிவே


Indian
நவ 04, 2025 15:47

நீங்க பா ஜா வோடு சேர்ந்ததால் மக்கள் உங்க கட்சிக்கு பாடம் புகட்டுவர்


ஆரூர் ரங்
நவ 04, 2025 13:47

மருத்துவமனைகள் தரகர்களின் உதவியுடன் நடத்தப்படுவதாக புகார்கள் உண்டு. ஆனால் அரசே தரகர்களின் தலைமையாக செயல்பட்டால் நீதி என்ன செய்யும்?


திகழ்ஓவியன்
நவ 04, 2025 14:14

இதனால் உனக்கோ எனக்கோ பாதிப்பு இல்லையே எவனுக்கு கிட்னி தேவையோ அவன் புரோக்கர் மூலம் வாங்கி வெச்சி உயிப்பிழிகிறான் , இது குஜராத்தில் தமிழ்நாட்டை விட அதிகம் அங்கு போராடி கிட்னி கொடுக்கமால் சாகடித்து விட்டு இங்கு வாருங்கள் கிட்னி யாரும் விற்க கூடாது


Rahim
நவ 04, 2025 13:35

ஷ்ஷ்ஹ்ஹ் அப்பப்பா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா....


திகழ்ஓவியன்
நவ 04, 2025 13:27

இவ்வளவு நாள் கிட்னி திருட்டு என்று சொன்ன நீங்கள் இன்று கிட்னி முறைகேடு என்று மாற்றி பேசுகிறீர்கள், உண்மை தான் அந்த கிட்னி முறைகேடு விஷயத்தால் நிறைய பேர் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் இது தான் உண்மை அதுவும் இந்த முறைகேடு முதன் முதலில் சுனாமி வந்த காலத்தில் இருந்து தொடர்கிறது, இது ஒன்றும் புதிது இல்லை, இதில் தவறு என்றால் புரோக்கர் தான் தவறு செய்தவன்


சமீபத்திய செய்தி