உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி, ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதே நேரம் உயிருடன் இருப்போர், ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து கொள்கின்றனர். ரத்த உறவுகள் அல்லாதவர்கள் அளிப்பது குற்றமாக உள்ளது.ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு ப குதியை பெற்று, அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, ரத்த உறவுகள் போல போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், ''மனித உறுப்புகள் திருட்டு மற்றும் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

joe
ஆக 19, 2025 17:44

ஆபரேஷன் செய்கிறேன் என்று GOVT GH ஆஸ்பத்திரிகளில் நிறைய நடக்கிறது .மயக்க ஊசி போட்டவுடன் நோயாளிக்கு என்ன நடக்கிறது என தெரியாது .இந்த இடை வேளையில் பாட்டிலில் உள்ள -அமிலத்தில் சேகரித்து வைத்த பழைய கிட்னியை மாற்றி ஆபரேஷன் செய்தும் ,நோயாளியின் நல்ல கிட்னியை மாற்றி எடுத்தும் ஆபரேஷன் செய்தும் FRAUD செய்கிறார்கள்.அதன் மூலம் காசு பண்ணுகிறார்கள் .TRAINING வருகின்ற மாணவ மாணவிகளும் இதை கண்டு கொள்வதில்லை .இதுதான் தமிழகத்தில் நடக்கிறது .டாக்டர்களிடம் இருந்து மக்களை காற்றை நடவடிக்கை எடுக்கவேண்டும் .ஏற்கனவே பல தடவை இந்த செடிகளை மீடியாக்களிடம் தெரிவித்தாகிவிட்டது .ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை .யாரும் இத கண்டுகொள்வதில்லை .தமிழகத்தில் உள்ள GH ஆஸ்பத்திரிகளில் இதுதான் நடக்கிறது .


Kasimani Baskaran
ஆக 19, 2025 16:18

உச்ச பஞ்சாயத்தார் இதற்கு உடனே தடை விதிக்கவேண்டும்.


S.L.Narasimman
ஆக 19, 2025 13:07

திருட்டு அல்ல முறைகேடுதான்னு சார் அ சுகாதார மந்திரி ஏற்கனவே விளக்கிட்டாரு. பஞ்சாயத்தை கலைங்க.


B N VISWANATHAN
ஆக 19, 2025 13:04

திருட்டு வேற முறைகேடு வேற.


S.V.Srinivasan
ஆக 19, 2025 12:58

அது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடாம்.


Yaro Oruvan
ஆக 19, 2025 12:55

பார்றா மறுபடி மறுபடி திருட்டுங்கறாங்க அது கிட்னி முறைகேடு எசமான்..


Ramona
ஆக 19, 2025 12:45

ஐயா கிட்னி திருட்டு என்று செல்லாதீர்கள்,சிறு குழப்பம் அதனால் மருத்துவர்களால் மறதியாக தவறாக எடுக்கப்பட்ட உறுப்பை கெட்டு போகும் முன் ,ஒரு சிறு அன்பளிப்பாக பணம் வாங்கிய குற்றத்துக்காக என கூறுவது சால சிறந்தது


ஆரூர் ரங்
ஆக 19, 2025 12:42

திமுக எம்எல்ஏ சம்பந்தப்பட்ட வழக்கு எப்போ சரியாக நடந்திருக்கு? பொன் ஓசி மந்திரி ஹிந்து மதத்தின் புனித சின்னங்களை இழிவுபடுத்திய வழக்கையே மூடிவிட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை