உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 6 பேர் படுகொலை: கேள்விக்குறியாகிறது தமிழக சட்டம் -ஒழுங்கு நிலவரம்

ஒரே நாளில் 6 பேர் படுகொலை: கேள்விக்குறியாகிறது தமிழக சட்டம் -ஒழுங்கு நிலவரம்

தமிழகம் முழுதும் நேற்று ஒரே நாளில், தென்காசி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் உட்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மது போதை உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ள இந்த கொலை சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.தமிழகத்தில் மது, கஞ்சா போதையில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dwoy96d5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆளும் கூட்டணி கட்சிகளே, இந்தக் கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.அதேநேரத்தில், ரவுடிகளின் கொட்டங்களை அடக்க, அவ்வப்போது என்கவுன்டர், தினமும் நான்கு பேருக்கு கட்டு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இருப்பினும், மது போதையிலும், கூலிப்படைகளாலும் நடக்கும் கொலைகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுதும் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விபரம்:

அ.தி.மு.க., பிரமுகர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லுாரைச் சேர்ந்தவர் வெளியப்பன், 52; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி மாரிச்செல்வி. கடந்த முறை மேலநீலிதநல்லுார் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனாக இருந்தார். வெளியப்பன், மேலநீலிதநல்லுாரில் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதுதொடர்பாக தேடப்பட்டவர்களில், அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை மேலநீலிதநல்லுார் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது.

ஆட்டோ ஓட்டுனர்

சென்னை பெரும்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் ஜெயராஜ், 26; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி திவ்யா, 24. இவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தாய் லட்சுமியுடன் ஜெயராஜ் வசித்து வந்தார். இவர், நண்பர்களுடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, பின் கடற்கரையில் அமர்ந்து பேசியுள்ளனர்.அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஜெயராஜின் நண்பர்கள், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கத்தியால் அவரது வயிற்றில் குத்தி கொலை செய்து தப்பினர். இதைப்பார்த்த அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி வந்த சாஸ்திரிநகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கொலை நடந்த நேரத்தில் அங்கிருந்த, ஒரு நண்பரின் மனைவியான ஸ்னேகா, 25, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி வருவதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, போலீசார் நேற்று இருவரை பிடித்தனர். கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.

கூலி தொழிலாளி

கோவை மாவட்டம் சோமனுார் அடுத்த ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல், 26; பனியன் கம்பெனி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 46; கூலி தொழிலாளி. அங்குள்ள பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு துரைசாமி துாங்க முயன்றதாகவும், அதற்கு கோகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் போதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைசாமி, கோகுலை கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வந்து, காயமடைந்த கோகுலை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கருமத்தம்பட்டி போலீசார் துரைசாமியை கைது செய்தனர்.

சொத்து தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாமோதரஹள்ளி, சின்னபாறையூரைச் சேர்ந்தவர் கண்ணாயிரம், 65; இவரது தம்பி பழனி, 61.இருவருக்கும் பொதுவாக மோழிவாயனுார் கிராமத்தில், 3 ஏக்கர் நிலமும், சின்னபாறையூர் கிராமத்தில் 1 ஏக்கர் நிலமும் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தகராறு இருந்துள்ளது.பழனி, சின்னபாறையூர் கிராமத்தில் அவரது நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கண்ணாயிரம் மகன் கணபதி, பழனி வசித்த பழைய குடிசைக்கு தீ வைத்ததில் எரிந்து நாசமானது. அண்ணன், தம்பி இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது.அப்போது பழனியின் கழுத்து பகுதியில் கண்ணாயிரம் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். தடுக்க வந்த பழனி மகன் பெரியசாமிக்கு கையில் வெட்டு விழுந்தது. பாரூர் போலீசார் கண்ணாயிரத்தை கைது செய்தனர்.

போதையில் கொலை

கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல், 30; செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது அண்ணன் ரங்கன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். பின், கோகுல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.போதையில், கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் செல்வபுரம் அடுத்த அசோக் நகர், பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருந்த கோகுலின் உறவினர் பிரவீன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த பிரவீன், நண்பர்களை அழைத்து வந்து கோகுலை தாக்கினார். பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் கோகுலை சரமாரியாக குத்தி தப்பினர். ரத்தம் சொட்ட, சொட்ட சிறிது துாரம் நடந்து சென்ற கோகுல், அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வபுரம் போலீசார், கோகுல் உடலை மீட்டனர்.வழக்கு பதிந்த போலீசார் பிரவீன், 29, நாகராஜ், 27, அவரது தம்பிகள் சந்துரு, 25, சூர்யா, 26, சஞ்சய், 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அண்ணனின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜாமினில் வந்தவர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புழுதிக்குளத்தில், கோபால்சாமி, 40, என்பவர் முன் விரோதம் காரணமாக மே 30ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, மோகன், 48, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணி உட்பட ஐந்து பேரை கீழத்துாவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மோகன் நிபந்தனை ஜாமின் பெற்று கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் ஆக., 20 முதல் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு கண்மாய் கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூ - வீலரில் சென்ற மூவர் அவரை வெட்டி சாய்த்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழத்துாவல் போலீசார் தப்பிய மூவரை தேடுகின்றனர்.@

கடந்த வார கொலை பட்டியல்

செ., 1 முதல் 7ம் தேதி வரை நடந்த கொலைகள் விபரம்: *  துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மது குடித்த போது, பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன் கொல்லப்பட்டார் * கடலுார் மாவட்டம் விருத்தாசலம் சின்னகண்டியங்குப்பம் பகுதியில், சம்பள பாக்கி விவகாரத்தில், செல்வமணி என்பவர், சித்தி மகன் சுப்பிரமணியனால் கொல்லப்பட்டார் *  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுனர் காளிக்குமார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே மர்ம கும்பலால் கொல்லப்பட்டார் *  வேலுார் மாவட்டம் ஒடுக்கத்துார் அருகே, பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த ஜீவா - டயனா தம்பதியர், இரண்டாவதாக பிறந்து ஒன்பது நாளேயான பெண் குழந்தையை விஷப்பால் கொடுத்து கொன்றனர் *  இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன, சென்னை புழலை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் வேல்குமார், துாக்கில் தொங்கிய நிலையில் எலும்பு கூடாக மீட்கப்பட்டார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது *  கரூர் மாவட்டம் நஞ்சைகாளக்குறிச்சியை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் கபில்தேவ், தன் மைத்துனர் வீரமலையால் குத்திக் கொல்லப்பட்டார் *  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, கீழப்பசலையை சேர்ந்த பிரவீன்ராஜ், அதே பகுதியில் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார் *  நீலகிரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக, ஆஷிகா பர்வீன் என்ற பெண் கொல்லப்பட்டார் *  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கொட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த வரதன், அவரது மகனால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மகளும் பலியானார் *  வாங்கிய கடனை திருப்பி தராததால், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் ரமேஷ் கொல்லப்பட்டு கிடந்தார் *  சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் தேசப்பன், அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு இடையூறாக சத்தம் போட்டவர்களை கண்டித்ததால் கொல்லப்பட்டார் *  துாத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், வீடு புகுந்த மர்மநபரால் ஆள்மாறாட்டத்தில் வெட்டி கொல்லப்பட்டார் * சென்னை வேளச்சேரி அருகே, பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜன், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Manalan
செப் 10, 2024 14:08

போதையில் கொலைகள் அதிகம் நடக்கிறது. தமிழக அரசு டாஸ்மாஸ்கை முடுமா ?


அப்பாவி
செப் 09, 2024 21:03

அமெரிக்காவிலிருந்து தளபதி உத்துப் பாத்துக்குட்டே இருக்காரு. வந்ததும் சாட்டையை சுழற்றி நாலு ஆப்பீசர்களை ட்ரான்ஸ்பர் பண்ணி அமைதியை நிலைநாட்டி விடியல் தருவாரு.


தாமரை மலர்கிறது
செப் 09, 2024 19:36

ஸ்டாலின் ஆட்சியை கலைத்து கவர்னர் ஆட்சியை கொண்டுவருவது நல்லது.


sridhar
செப் 09, 2024 18:53

முந்தாநேத்து பத்து கொலை , எட்டு கற்பழிப்பு , நேற்று ஆறு , நாலு தான். சட்டம் ஒழுங்கு முன்னேறுகிறது.


Kasimani Baskaran
செப் 09, 2024 18:48

முன்விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு அரசு மட்டுமல்ல காவல்துறை கூட ஒரு பொழுதும் பொறுப்பேற்காது. சட்டமாவது ஒழுங்காவது.


என்றும் இந்தியன்
செப் 09, 2024 18:03

இந்தியாவில் வருடத்தில் 7.3 /ஒவ்வொரு 1000 மக்களுக்கும் இறக்கின்றார்கள் அப்படியென்றால் டாஸ்மாக்கினாட்டில் 8.2 கோடி ஜனத்தொகை 82000 7.3 = 5,70,000 லட்சம் மக்கள் இறக்கின்றார்கள்???அதில் கொலை????


என்றும் இந்தியன்
செப் 09, 2024 18:03

இந்தியாவில் வருடத்தில் 7.3 /ஒவ்வொரு 1000 மக்களுக்கும் இறக்கின்றார்கள் அப்படியென்றால் டாஸ்மாக்கினாட்டில் 8.2 கோடி ஜனத்தொகை 82000 7.3 = 5,70,000 லட்சம் மக்கள் இறக்கின்றார்கள்???அதில் கொலை????


Yaro Oruvan
செப் 09, 2024 17:21

ஹா ஹா இருந்துட்டா மட்டும்... கிழிச்சு தொங்கவுட்ருவாப்புல


J.V. Iyer
செப் 09, 2024 17:12

குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக, அரசை விமரிசிக்கும் எதிர்கட்சிகளை கைதுசெய்ய மும்மரம் காட்டுவதினால் இந்த நிலைமை. தமிழகம் ஒரு இருளகம்.


sankaran
செப் 09, 2024 15:57

2026 தேர்தலிலும் திமுகதான் ஜெயிக்கும்...


சமீபத்திய செய்தி