உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கூடுதல் தகவல்களை பெறும் வகையில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரித்தனர்.இந்நிலையில், இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
மார் 25, 2025 17:36

கப்பம் குடும்ப கம்பெனிக்கு ஒழுங்கா கட்டளைய்யா? கேசு அப்போ எட்டி பாத்துட்டு தூங்கிடுதே.


சத்யநாராயணன்
மார் 25, 2025 17:15

நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டே போகிறது


பல்லவி
மார் 25, 2025 13:40

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கொள்ளையர்களென்று பெயர் சூட்டலாமா என்ன சொல்லுங்கள்


Ramesh Sargam
மார் 25, 2025 12:09

சம்பவம் நடந்த ஆண்டு 2017. ஆனால் ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் சம்மன் கொடுப்பதில் உள்ளனர். எப்பொழுது நீதி கிடைக்கும் இந்த வழக்கில்? நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிக மிக கவலையளிக்கிறது.


ramesh
மார் 25, 2025 11:18

இந்த வழக்கை பொறுத்தவரையில் மிக பெரிய கும்பகர்ண தூக்கம் எடப்பாடி ஆட்சி முடிந்த பிறகு. யாரை காப்பாற்ற இந்த வழக்கு விசாரிக்க படாமல் இருந்தது . சயான் அப்ப்ரூவராக மாற தயாராக இருந்தும் 4 ஆண்டுகளாக விசாரிக்க படவில்லை . கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை