உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சேலம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்பில், சேலம், சோனா கல்லுாரி மைதானத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் பலராமர், கிருஷ்ணர், விக்ரகங்களை எழுந்தருள செய்து, 100க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளை தட்டுகளில் அடுக்கி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மேலும் கிருஷ்ண ஜென்ம லீலைகள், கோவர்த்தன லீலை, கோபியர்களுடன் புரிந்த லீலை என பல்வேறு குழுக்களின் நாட்டிய நாடகங்கள், 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' குழுவினரின் பஜனை பாடல்கள், இசை கச்சேரிகள், திவ்ய நாம சங்கீர்த்தனங்கள், அபிேஷகம், ஆரத்தி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனைவருக்கும் விருந்து பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல் பொன்னம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவில் முழுதும் மலர்களால் அலங்கரித்து மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் தொட்டில் அமைத்து, அதில் பலவித கிருஷ்ணர் பொம்மைகளை அலங்கரித்து வைத்திருந்தனர். ஒருபுறம், 50க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் பொம்மைகளை கொண்டு கொலு அமைத்திருந்தனர். மேலும் கிருஷ்ணர், பலராமர், ராதை வேடம் அணிந்த குழந்தைகளை, பெற்றோர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். வீரபாண்டி, அங்காளம்மன்; தாரமங்கலம் அருகே பெரியகாடம்பட்டி தேவ கிருஷ்ணா கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை