உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தான் படித்த பள்ளியை பளபளப்பாக்கிய சென்னை தொழிலதிபருக்கு பாராட்டுகள்: ரூ.2.15 கோடி செலவழித்து அசத்தல்

தான் படித்த பள்ளியை பளபளப்பாக்கிய சென்னை தொழிலதிபருக்கு பாராட்டுகள்: ரூ.2.15 கோடி செலவழித்து அசத்தல்

பெரம்பலுார் : தான் படித்த பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்து, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ள சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 61. சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், 'வெரிடாஸ் பவுண்டேஷன்' என்ற நிதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.சில மாதங்களுக்கு முன், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது, தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றார். அப்போது, 1980ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், இதனால், 166 மாணவ - மாணவியரே தற்போது அங்கு படிப்பதையும் அறிந்தார்.தொடர்ந்து தன் சொந்த செலவில், வெரிடாஸ் பவுண்டேஷன் வாயிலாக, 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி திட்டத்தின் கீழ், தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தர முடிவு செய்தார்.சிதிலமடைந்த பள்ளி மேற்கூரை, சுற்றுச்சுவர், விழா மேடை, கலையரங்கம், குளிர்சாதன ஆய்வகம், கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, கண்கவர் கார்டன், விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இதற்காக, 2.15 கோடி ரூபாய் செலவழித்துள்ளார்.இவரது முயற்சியில் பளபளப்பாகியுள்ள அரசு பள்ளி கட்டமைப்பை, பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று திறந்து வைத்தார். அருள்மணியை கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அருள்மணி கூறியதாவது:

நான், 1976ல் லாடபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஊருக்கு வந்தபோது, பள்ளி குறித்தும், அதில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் உறவினர்கள் வாயிலாக அறிந்தேன்.என் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தேன். குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் உள்ள ஐ.ஆர்.எம்.ஏ., இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளேன்.நான் வாழ்வில் உயர்ந்ததற்கு அடித்தளமாக இருந்தது இந்த ஆரம்பப் பள்ளி தான். படித்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இதில், பாராட்டும் அளவுக்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.அருள்மணியை பாராட்ட 95000 57883 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

C.SRIRAM
மார் 07, 2025 21:16

பாராட்டுகள் . ஆனால் அரசு என்ன செய்கிறதே என்கிற கேள்வி எழுகிறதே ?. வரியையும் வாங்கிக்கொண்டு பின்னரும் தனியாக அரசு செய்ய வேண்டுயவற்றையும் தனி நபர் செய்ய வேண்டுமென்றால் அரசு எதற்கு?. மக்களின் வரிப்பணத்தை கணக்கு வழக்கில்லாமல் ஊழல் செய்யமட்டும் தானா ?. எந்த அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை வர மறுக்கிறது .


Ray
மார் 07, 2025 19:53

பெரியவாள்ளாம் இதே மாதிரி செஞ்சா நம்ம ஊரும் நாடும் எங்கோ போய்டும். இன்றைய நம்ம பாலிசியே பளபளன்னு இருந்தா அவனுங்கள அழிச்சிடறதுதானே.


R Barathan
மார் 07, 2025 19:08

செய்வதற்கு மனம் வேண்டும். இந்த தொழில் அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். கோடி கோடியாய் கொள்ளை அடித்த திராவிட கும்பல் இது போல் எங்காவது செய்ததுண்டா. கொள்ளை அடித்த பணத்தில் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்துதான் பார்த்துள்ளோம்.


Rajan A
மார் 07, 2025 18:01

ஒப்பற்ற சேவை. நீடூழி வாழ்க. நல்லவர்கள் இன்னும் திராவிட மாடல் மண்ணில் இருக்கிறார்கள் என்பது ஆறுதலாக உள்ளது. இதுவரை எத்தனை அரசியல் வியாதி இதனை செய்தார்கள்


Sampath Kumar
மார் 07, 2025 14:12

அருமை அருமை பாராட்டுக்கள்


Murthy
மார் 07, 2025 13:39

முன்னேறிய மாநிலம் என்று பீற்றிக்கொண்டாள் ....யார் முன்னேறி இருக்கிறார்கள் . ....திராவிடர்களும் அதன் ஆட்சியாளர்களும் குறு நில மன்னர்களாக மாறியிருக்கிறார்கள் .....சாமானிய மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் .


HoneyBee
மார் 07, 2025 11:55

இதுக்கும் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டும். இவர் இந்த நிலைக்கு வந்தது என்று படை மாற்றும்


kantharvan
மார் 07, 2025 11:51

தர்மேந்திரா பிரதான் தான் பதில் சொல்லணும் ??? தர்மவான் கல்வி நிதியை தர முடியாது என்று மறுக்க சட்டத்தில் இடமில்லை. ஹிந்தி சம்ஸ்கிருத திணிப்பு என்கிற நோயை விரட்டியடிக்க வேண்டும். பீஹாருக்கு அளிக்கும் தேவையற்ற நிதியை குறைக்க வேண்டும் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் திராவிட சூரியன் வடக்கேயும் உதிக்க வேண்டும் .


Raman
மார் 07, 2025 19:39

You are typical Rs 200.


C.SRIRAM
மார் 07, 2025 22:38

திருட்டு திராவிடம் தமிழகத்திலிருந்து ஒழிய வேண்டும் . சட்டம் என்றால் என்ன என்று தெரியுமா .


Ramachandran K
மார் 07, 2025 11:13

நம்ம பள்ளி நம்ம ஊரு தானே சரி. அதென்ன நம்ம ஸ்கூல்


Oru Indiyan
மார் 07, 2025 13:06

என்னங்க ஸ்கூல் தமிழ் வார்த்தை தானே. உங்களுக்கு தெரியாதா? ஆவின் பால் வகைகள் என்ன என்று தெரியுமா? டிலைட், நைஸ், கிரீன் மேஜிக், ஆரஞ்சு.. இவை தமிழ் வார்த்தைகள் என்றால்.. எல்லாமே தமிழ் வார்த்தை தான்.


Madras Madra
மார் 07, 2025 11:09

வெறும் மனிதனல்ல இவர் புனிதர்


முக்கிய வீடியோ