உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவியிருந்து எல்.முருகன் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவியிருந்து எல்.முருகன் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

- நமது சிறப்பு நிருபர் -மத்திய அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளில் இருந்து விலகுவதாக, பிரதமர் மோடிக்கு, மத்திய தகவல் தொடர்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

விலகுவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்த முருகன் 2017ல் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் தோல்வி அடைந்த அவர், 2021 ஜூலை 7ல் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 லோக்சபா தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், அவருக்கு மீண்டும் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் முருகன் ராஜினாமா செய்துள்ளார்.அவர் மீண்டும் பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பினரோ, 'பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் எடுத்த முடிவின்படியே முருகன் ராஜினாமா செய்துள்ளார். முருகன் மீண்டும் மாநில தலைவராகும் வாய்ப்பு மிகவும் குறைவு' என்கின்றனர்.பதவியை ராஜினாமா செய்த பின் பேட்டியளித்த எல்.முருகன், ''தமிழகத்திலிருந்து லோக்சபா தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லிக்கு வர விரும்புகிறேன்,'' என்று கூறினார்.

2030 வரை பதவிக்காலம்

கடந்த, 2021 ஜூலை 7ம் தேதி மத்திய இணை அமைச்சரான முருகன், 2021 செப்டம்பரில் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யானார். இந்தப் பதவி, இரண்டரை ஆண்டுகளில் முடிந்த நிலையில், 2024 ஏப்ரல் 3ல், இரண்டாவது முறையாக, அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானார். அவரது எம்.பி., பதவிக்காலம், 2030 ஏப்ரல், 2ம் தேதி வரை இருக்கும் நிலையில், விலகுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Kali App
அக் 15, 2026 12:31

25 கோடி மக்கள் பணக்காரன் ஆகி விட்டான் என்பர்


Rajan
அக் 15, 2026 00:33

'L' Murugan fails in driving his minitry or as President of the party.


V Narayanan
அக் 14, 2026 23:21

மெதுவாக படிப்படியாக கீழே இறக்குவது இது .


Easwar Kamal
அக் 14, 2026 18:39

இவனுக்கு இதையே பொழப்பு. பொழுது போகலேனா உடனே ஸ்டாலின் மற்றும் உதயநிதி. பார்த்து தம்பி ஏற்கனவே ஊழல் புகார் வர அரமபிச்சிருச்சு நீங்க ஒன்னும் DMK மாதிரி SCIENTIFIC ஊழல் ஆட்கள் கிடையாது . மாட்டினால் 5 வருடம உள்ளெ. ஜெயாவுக்கு ஆப்பு வச்சானுவ நீ எல்லாம் DMK எம்மாத்திரம்.


Easwar Kamal
அக் 14, 2026 18:25

அண்ணாமலை மாதிரி ஆட்கள் தான் வேண்டும்.


சூர்யா
அக் 14, 2026 13:28

பா.ஜ.க வைப் பற்றி நிறையப் பேர் ரொம்ப சாதாரணமா நெனச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவரை முழுமையாக நம்பினால் அவரிடம் அதிகாரம், பதவி எல்லாம் முழுசா அவங்க கையிலேயே கொடுத்து சுயமா அவங்களை வேலை செய்ய விடுவாங்க. அதுல எதாவது கட்சியோட நோக்கத்திற்கு எதிரா கோக்கு, மாக்கு பண்ணினா? அவ்வளவுதான்.அப்புறம் வீதியில் நின்னு தெருவையும், ஆற்றையும் சுத்தம் செய்யப் போக வேண்டியதுதான். இது அனைவருக்குமே பொருந்தும். முருகன் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.


gayathri
அக் 15, 2026 09:26

திருடுவது ஊழல் seivathai விட தெரு, ஆற்றை சுத்தம் செய்வது ஒன்றும் கேவலம் இல்லையே.லஞ்சம், ஊழல் கமிஷன் பொது மக்கள் பணத்தை திருடுவது அந்த பணத்தில் சுக வாழ்க்கை வாழ்வது, அந்த சாக்கடையை தின்பது, இவைதான் கேவலம். சேவை செய்வது கேவலம் இல்லையே


Balasri Bavithra
அக் 14, 2026 13:16

இந்த மாதிரி தகுதி இல்லாத அமைச்சர் நிறைய பிஜேபி உள்ளனர்


raju
அக் 14, 2026 13:12

இவருடைய சாதனைகள் (?) கீழே 2011 தேர்தல் - தோல்வி (வாங்கிய ஓட்டு 1730) 2012 இடை தேர்தல் - தோல்வி (வாங்கிய ஓட்டு 1633) 2021 தேர்தல் - தோல்வி (வாங்கிய ஓட்டு 88593) 2024 தேர்தல் - தோல்வி (வித்தியாசம் 2.4 லட்சம்) 2026 தேர்தல் - தோல்வி (வித்தியாசம் 15373)


அசோகன்
அக் 14, 2026 12:21

இவர் திகாவுக்கு ஏதாவது ஓன்று என்றால் கொதிப்பர் ஆனால் மோடியை எப்படி கேவலலமாக திட்டி மீடியாகலில் பேசினாலும் கண்டு கொள்ளாமல் அதை ரசிப்பார்.... இவரையெல்லாம் எப்படி பிஜேபி வைத்திருக்கிறது


rajasekaran
அக் 14, 2026 12:17

பிஜேபி மேல் இடத்திற்கு யாரோ தவறான செய்தியை அனுப்பி உள்ளார்கள். இவர் சொகுசு வாழ்க்கை வாழுந்தவர் . இவரால் தமிழ்நாடு பிஜேபி ஒன்றும் வளராது.


புதிய வீடியோ