உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழநி: பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் பழநி ஆண்டவன் பூங்கா ரோடு, சன்னிதி வீதியை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் புதர் மண்டி முட்செடிகளுடன் இருந்தது. இது குறித்த வழக்கு பழனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலத்தை நேற்று கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் சுத்தம் செய்து கையகப்படுத்தினர். இந்த நிலம் 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய். இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ