உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில அபகரிப்பு புகார்மாஜி அமைச்சர் மறுப்பு

நில அபகரிப்பு புகார்மாஜி அமைச்சர் மறுப்பு

திண்டுக்கல்:நில அபகரிப்புப் புகாருக்கு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னையைச் சேர்ந்த சவுந்திரராஜன் கொடுத்துள்ள புகாரில், மனோகரனின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் நானும், உதவியாளர்கள் ராஜா, தங்கவேல் ஆகியோரும் அவரது தங்கை கலைச்செல்வியை விரட்ட முயற்சித்ததாகக் கூறப்பட்டுள்ளது.இதில் போலீஸ் தலையிட்டு, பிரச்னையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியதாகவும், அவரது தங்கை இறப்புக்குப் பின், சொத்தை அபகரித்து போலி பத்திரங்கள் தயார் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், புகார் கொடுத்துள்ளனர்.இதில் எனக்கோ, என்னைச் சார்ந்தவர்களுக்கோ தொடர்பு இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில், புகார் கொடுக்கப்பட்டுள்ளது.விசாரணை நடக்கும் பட்சத்தில், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். புகார் கொடுத்தவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும், என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ