உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலஅளவை அலுவலர்கள் வேலைநிறுத்தம் துவக்கம்

நிலஅளவை அலுவலர்கள் வேலைநிறுத்தம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : மதுரையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அமைப்பினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் போராட்டத்தை துவக்கினர்.களப்பணியாளர் பணிச்சுமையை குறைக்க வேண்டும், தரம் இறக்கிய குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும், நிலஅளவைத் துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.நேற்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம் துவங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைத் தலைவர் சிவா வரவேற்றார். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மாவட்டச் செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் முகைதீன் அப்துல்காதர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நீதிராஜா, சாலைப்பணியாளர் சங்க பொருளாளர் தமிழ் உட்பட பலர் பேசினர். கோட்ட கிளைத்தலைவர் பெருமாயி நன்றி கூறினார். மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் பலர் 'ஆப்சென்ட்' ஆனதால் பணிகள் பாதித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அழகு / ALAGU
ஜூலை 17, 2025 08:35

ஆன்லைன் மூலம் அப்ளை செய்துவிட்டு நேரில் சென்றால் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள் பாவம் வேளை பளு அப்படியே வந்தாலும் வந்து சற்று சைட்டை பார்த்துவிட்டு சப் டிவிஷன் செய்வார்கள் ஆனால் டிஜிட்டல் முறையில் அப்டேட்ஸ் இருக்காது. 1௦௦% வேலையை முடிக்க மாட்டார்கள்.....அதற்கும் காரணம் சொல்வார்கள்.


Balakrishnan karuppannan
ஜூலை 16, 2025 20:51

லஞ்சம் வாங்காமல் வேலை செய்வோம் என்று கூறுவார்களா.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 16, 2025 13:43

இந்த வேலை நிறுத்தம் செய்வதால் என்ன இலாபம்


mdg mdg
ஜூலை 16, 2025 12:33

இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யுங்கள் ஏன்னா லஞ்சம் வாங்காத சர்வேயர் தமிழ்நாட்டுல இல்ல.


முருகன்
ஜூலை 16, 2025 10:56

லஞ்சம் வாங்கினால் பதவி நீக்கம் சிறை தண்டனை என அரசு சட்டம் இயற்ற வேண்டும் இவர்களுக்கு


RAVINDRAN.G
ஜூலை 16, 2025 10:48

இந்த துறையில் லஞ்சம் வாங்காத ஒரு நபரை காட்டுங்கள்.


Nava
ஜூலை 16, 2025 08:40

இந்த துறையில் லஞ்சம் கொடுக்காமல் உங்களது வேலையை செய்து முடித்து விட்டால் அவர் ஜெகதலா கில்லடியாகதான் இருப்பார் மேலும் அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இவர்களின் கோரிக்கைகளோடு எந்த எந்த பணிகளுக்கு எவ்வளவு என்று ஒரு ரேட் கார்டு லஞ்ச பணம் முடிவு செய்து வெளியிட்டு விட்டால் சாமனியனுக்கு நலம் என்று கருதுகிறேன்.


Jack
ஜூலை 16, 2025 08:40

டோட்டல் ஸ்டேஷன் போன்ற உபகரணங்கள் நில அளவுகளை துல்லியமாக அளவெடுக்கும் ...டிஜிட்டல் முறையில் ஆட்டோகேட் PDF வடிவங்களில் சேமித்து வேலையே எளிதாக்கலாம் ...இவர்களை அளக்க கூப்பிட்டால் போக வர படியளக்க வேண்டும் .. முறையாக கையெழுத்திட்டு ஆவணமாக தரும் வழக்கம் கிடையாது ... TCS போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் டிப்ளமா படித்த சர்வேயர் வரை மாநிலம் முழுக்க டிஜிட்டல் படங்கள் தயாரித்து கொடுப்பார்கள்


NRajasekar
ஜூலை 16, 2025 08:11

லஞ்சம் வாங்கும் போது கைது செய்ய கூடாது என்று முதன்மையான் கோரிக்கை இருக்குமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை