உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 32 வகை கனிமங்களுக்கு நிலவரி விகிதம் நிர்ணயம்

32 வகை கனிமங்களுக்கு நிலவரி விகிதம் நிர்ணயம்

சென்னை:தமிழகத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரி சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 32 வகை கனிமங்களுக்கு வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரி சட்டம், கடந்த ஆண்டு இயற்றப்பட்டது. வரி விதிப்பு விதிகள், ஏப்., 4ல் வெளியிடப்பட்டன. இதன்படி, 32 வகையான கனிமங்களுக்கான வரி விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெருங்கனிமம் மற்றும் சிறு கனிமங்களை குவாரி அமைத்து எடுப்பவர்கள், வழக்கமான பல்வேறு கட்டணங்களுடன், புதிய சட்ட விதிகளின்படி நிலவரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.அதிகபட்ச தொகையாக, சிலிமனைட் கனிமத்துக்கு டன்னுக்கு, 7,000 ரூபாய்; குறைந்தபட்சமாக, களிமண்ணுக்கு டன்னுக்கு, 40 ரூபாய் என வரி விகிதம் நிர்ணயம் செயயப்பட்டு உள்ளது.இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ