உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்: அண்ணாமலை

மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்: அண்ணாமலை

வாரணாசி: '' மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்துக்கும், உபி.,யின் காசி நகருக்கும் உள்ள ஆழமான நாகரிக பிணைப்புகளை கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி கடந்த டிச., 2 முதல் நடந்து வருகிறது. வரும் 15 ம் தேதி இந்நிகழ்ச்சி முடிவடைகிறது. ' தமிழ் கற்கலாம்' என்ற மையக்கருத்து அடிப்படையில் நடக்கிறது.இந்நிகழ்ச்சியில் இன்று அண்ணாமலை பேசியதாவது: மொழி அரசியலை ஒழிக்க வேண்டும். உ.பி.,யைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தமிழகம் வந்து சிறு சிறு தமிழ் வார்த்தைகளை கற்க உள்ளனர். உபி மக்கள் நம்மை சகோதரனாக பார்க்கின்றனர். இது குறித்த புரிதல் இங்கு சிலருக்கு இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசி தமிழ்சங்கமம் 4.0 ல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளிடையே இருப்பது பாக்கியம். நமது வளமான தமிழ் கலாசாரம், நமது கல்வி முறையில் அதன் இடத்தை பெறுவதை உறுதி செய்வதே பிரதமர் மோடியின் தொலைநோக்குப்பார்வை.https://x.com/annamalai_k/status/1998743031328157731 உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் உந்துதலால் தமிழ் கலாசாரம் தமிழக எல்லைக்கு அப்பாலும் கொண்டாடப்படுகிறது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் காசியின் காலத்தால் அழியாத ஆன்மிகத்தை தமிழகத்தின் வளமான பாரம்பரியத்துடன் இணைக்கிறது. தமிழ் கற்கலாம் மூலம், உபி பள்ளிகள் இப்போது தமிழைக் கற்பிக்கும். அதே நேரத்தில் உபி மாணவர்கள் நமது கலாச்சார பொக்கிஷங்களைக் கண்டறிய தமிழகம் செல்வார்கள். சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை ஆகியன இந்த கலாச்சார ஒத்துழைப்பில் ஒன்றாக நிற்கிறார்கள்.https://x.com/annamalai_k/status/1998746045296292316மொழி ஒன்றுபட வேண்டும், ஒருபோதும் பிரிக்கக்கூடாது. வாரணாசியைச் சேர்ந்த ஒரு மாணவர் தமிழ் கற்கும்போதும், மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவர் காசியின் ஞானத்தைக் கண்டறியும்போதும், நாம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்துகிறோம். இப்படித்தான் நாளைய இந்தியாவைக் கட்டமைக்கும்போது நம் முன்னோர்களை மதிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
டிச 11, 2025 11:59

தமிழகத்தை மூன்றாக பிரித்துவிடுங்கள் ...தமிழகம் திருந்தினால் , பாரதமே தவறுகள் இன்றி திருத்தமாக இருக்கும் ...ஒற்றை தமிழகம் மொழி வெறி ,சாதிவெறி , லஞ்சம் , தற்குறித்தனத்தை தூண்டும் திராவிடத்தின் ஊற்றுக்கண் ..திராவிட மாயையை ஒழிக்க ,அந்த மாயையின் மூலமான தமிழகத்தை சிதறடிக்கவேண்டும் ..ஒற்றை மொழி மாநிலம் என்றுமே தேசியத்துக்கு ஆபத்துதான் ..


அப்பாவி
டிச 11, 2025 10:20

இந்தித் திணிப்பை ஒழிப்போம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 11:34

மெல்லவும் முடியாம ...


கோபாலகிருஷ்ணன் பெங்களுர்
டிச 11, 2025 12:32

ஒழிச்சி.....திராவிட பாடலுக்கு கொத்தடிமையாக இருப்போம் என அப்பாவியா சொல்கிறீரா ???


vivek
டிச 11, 2025 13:48

காமெடி பிசு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:55

மொழி அரசியலை வைத்துத்தான் திமுக மக்களை அறிவிலிகள் ஆக்கியது... மூளைச்சலவை செய்தது... இன்னமும் அது அவலம் என்று தமிழர்கள் உணரவில்லை.. தங்களது அறிவை திராவிட வந்தேறிகளிடம் அடகு வைத்துவிட்டனர்..


ஜெய்ஹிந்த்புரம்
டிச 11, 2025 00:48

இதை எந்த மொழியில் சொன்னாருன்னு சொல்லுங்களேன்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 11, 2025 07:55

அரேபிய மொழியில் மட்டும் அவர் சொல்லி இருக்க மாட்டார்.....!!!


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:55

திராவிடம் என்பது எந்த மொழிச்சொல் >>>>


surya krishna
டிச 10, 2025 21:58

இந்துக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு 40 எம்பிகளைக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் மத அரசியல் செய்து கொண்டிருக்கும் திமுக கூட்டணி கட்சிகள் உள்ள தமிழ்நாட்டில், மொழி அரசியல் மட்டுமல்ல மத அரசியலையும் ஒழிக்க வேண்டும் துடைத்து எறிய வேண்டும்


balaji
டிச 10, 2025 21:29

ஐயா 200 ரூபா உ. பி முருகன் அவர்களே, உங்கள் வீட்டில் படித்தவர்கள் யாருமே இல்லையா ? இன்னும் கதற வேண்டியது நிறைய இருக்கு.


baala
டிச 11, 2025 09:22

200 அப்ளை செய்வது எப்படி.


முருகன்
டிச 10, 2025 21:09

ஹிந்தியை தினிக்க எப்படி எல்லாம் பேச வேண்டி உள்ளது


vivek
டிச 10, 2025 21:21

இங்கே தமிழே துண்டு சீட்டில் தள்ளாடுகிறது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 10, 2025 21:25

ஆமாம் குடித்து விட்டு கால்வாயில் உழலும் உனக்கு இந்தி எதற்கு???


Kasimani Baskaran
டிச 11, 2025 04:12

தமிழகத்தில் திராவிட ஆட்சி அரைநூற்றாண்டாக நடக்கிறது. தமிழ் தேர்வு எழுதாமல் பல்லாயிரம் பேர் ஓடிவிடுகிறார்கள். கூடுதலாக 40000 தமிழாசிரியர்களால் தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தனியாரிலும் தமிழுக்கு இதே தரம்தான் - ஏனென்றால் அவர்களுக்கு ஹிந்தி மற்றும் வேறு மொழிகள் முக்கியம். தாய்மொழியை புறக்கணித்த சமூகம் தனது மொழியை மட்டுமல்ல இனத்தின் அடையாளத்தையும் கூட இழந்து விடும். தத்தித்தனமாக சிந்தித்தால் தாய் மொழி அழிந்து போகும் - அதுதான் திராவிடக்கூட்டத்தில் குறிக்கோள்.


SUBBU,MADURAI
டிச 11, 2025 07:30

முதலில் தமிழை பிழையில்லாமல் எழுது எந்த வார்த்தைக்கு எத்தனை சுழி ண் ன் போட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு கருத்தை போடு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை