உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

சென்னை: மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு, தமிழக அரசு இறுதி வாய்ப்பு வழங்கி உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, மகளிருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, 1.16 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூடுதலாக பலருக்கு உரிமைத்தொகை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலா க, 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இவற்றை பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு, டிச., 15 முதல் உரிமைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது. இதுவரை, இத்திட்டத்திற்கு விண்ணப்பம் அளிக்காத மகளிர் விண்ணப்பிக்க, இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் குறைதீர்வு கூட்டங்களில், விண்ணப்பங்களை வழங்கலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி