உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை

வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை

குன்னுார் : குன்னுார் அருகே, சிறுத்தை காட்டு பன்றியை வேட்டையாடி போது, வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன; இரவில் மக்கள் தனியாக நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் இரவு நேரத்தில் வரும் சிறுத்தைகள் வளர்ப்பு நாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி செல்கின்றன.இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு கம்பிசோலை பஸ் ஸ்டாப் அருகே சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த ராணுவ பாதுகாவலர்கள், அந்த பகுதியில் சிறிது நேரம் மக்கள் நடந்து செல்ல தடை விதித்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், அரை மணி நேரம் சாலையில் யாரும் செல்லவில்லை.மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை ஆரோக்கியபுரம் முத்தம்மா சேரி பகுதிக்கு வந்து, காட்டு பன்றியை வேட்டையாடி இழுத்து சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர், 'அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் தனியாக யாரும் அந்த சாலையில் யாரும் செல்ல வேண்டாம்,' என தடை விதித்தனர். கட்டபெட்டு ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !