உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குருவை போற்றி வணங்குவோம்! விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அருளுரை

குருவை போற்றி வணங்குவோம்! விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அருளுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 75வது ஜன்மதின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி, சன்னிதானம் விதுசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளின் அருளுரை:நடமாடும் சாரதாம்பாளாகத் திகழும் நம் குருவை, சிறு வயதிலிருந்தே தரிசிக்கும், அவரது உபதேசங்களைக் கேட்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது; பல ஜன்ம புண்ணியம் இது. குருவுக்கு சிறிதளவாவது சேவை செய்து, அவரது அருளுக்கு நாம் பாத்திரமாக வேண்டும்.'பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வகையான கல்வியிலும் உயர்ந்ததான ஆத்ம வித்யையாக நான் இருக்கிறேன்' என்று பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார். பிரம்ம வித்யையை தான் பகவான் இப்படி கூறுகிறார். இதை போதிக்கும் பரம்பரை, அவரிடமிருந்தே துவங்குகிறது. அவரிடமிருந்து சனாதன தர்மத்தை வசீகரித்த ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரை நடுநாயகராகக் கொண்டு, இன்று நம் குருநாதர் வரையிலான ஆச்சார்யர்களை நாம் வணங்க வேண்டும்.கேள்வி கேட்டு பதில் பெற்று முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்கிறபடியால், குருவை மனதாலும், உடலாலும் நமஸ்கரித்து, சேவை செய்ய வேண்டும்.குருநாதர் நம்மை எந்த செயலைச் செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டும். நாம் கேட்ட கேள்விக்கு அது சம்பந்தம் இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் செய்ய வேண்டும். இப்படி நம்மை நாமே முழுதுமாய் அர்ப்பணித்து குரு சேவை செய்ய வேண்டும்.கல்லுக்கும், ரத்தினத்துக்கும் வித்தியாசம் அறிய, அதற்குரிய அறிவை நாம் பெற வேண்டும் அல்லவா... அந்த அறிவைப் பெற நாம் தகுதியுள்ளவர்களா என்பதை குருநாதர் தான் கண்டுபிடிப்பார்.எனவே, அவரின் பெருமையை புரிந்து கொள்ள, அவரது மகிமையை அறிய, நாம் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு குருநாதரை போற்றி வணங்குவோம்.அப்படிப்பட்ட குருநாதரை வணங்குவோர் எவரும், வாழ்வில் உயர்வடையட்டும், அவரது துக்கங்கள் துாரமாகட்டும்; சனாதன வைதிக தர்மம் செழிக்கட்டும்.அனைவரும் எங்கள் நாராயண ஸ்மரணபூர்வகமான ஆசிகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஏப் 07, 2025 12:55

குருவே சரணம். சங்கரம் போற்றி. ஷங்கராச்சார்யம் போற்றி.


Venkatesan
ஏப் 07, 2025 12:09

குருவே சரணம். குருவின் திருவடி புகழ் ஓங்குக.


RAVINDRAN.G
ஏப் 07, 2025 09:56

ஸ்ரீ குருப்யோ நமஹ. ஹரி ஓம். குரு வாழ்க குருவே துணை


Nallavan
ஏப் 07, 2025 08:30

பிறருக்கு உதவி செய்தால் மனிதனும் தெய்வமாகலாம்


sundarsvpr
ஏப் 07, 2025 05:13

தாய் தந்தை ஆசி இல்லாமல் எந்த நிகழ்வுகளும் பிரகாசம் அடையாது. எனவேதான் நம் ஹிந்து மத வாழ்க்கை நடைமுறையில் அன்னையும் பிதாவும் முன் அறிந்த தெய்வம் என்று அறிவுறுத்துகிறது. இவர்கள் ஆசியை பெற்று குருவை நமஸ்கரிக்கவேண்டும். பிறகுதான் ஆண்டவன் திருவடிகளை வணங்கவேண்டும். அரசியலில் பிரதம மந்திரி ஆசாரியன் ஜனாதிபதி தெய்வம். powerful குரு என்பதில் சந்தேகம் இல்லை ஆன்மிகத்தில் குரு.


மணி
ஏப் 07, 2025 05:04

குருவே சரணம்


முக்கிய வீடியோ