கலாம் வழியில் அயராது உழைப்போம்
இந்தியாவை வளர்ந்த நாடாகவும், தமிழகத்தை வளர்ந்த மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட அப்துல் கலாம் நினைவு நாளில், அவரை போற்றி வணங்குகிறோம். இந்தியாவையும், தமிழகத்தையும் முன்னேற்றுவதற்கான செயல்திட்டம் அவரிடம் இருந்தது. அதை யாரால் நிறைவேற்ற முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மறைந்த மேதையின் நினைவு நாளில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான அவரது கனவை நனவாக்க, கடுமையாக உழைக்க உறுதியேற்றுக் கொள்வோம். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,