மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
41 minutes ago
சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்
45 minutes ago | 1
கவுஹாத்தி: ராகுலின் ஆணவத்திற்கு லோக்சபா தேர்தலில் பதிலடி கொடுப்போம் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உறுதி அளித்துள்ளார்.மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரையிலான ராகுலின் யாத்திரை குழு, அசாமில் இருந்து மேகாலயாவுக்குள் சென்று, மீண்டும் அசாம் வந்தது. தலைநகர் கவுஹாத்தியில் நுழைய அசாம் அரசு அனுமதி மறுத்தது. ராகுலுடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள், போலீசார் அமைத்த தடுப்புகளை அடித்து நொறுக்கி ஊருக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும், போலீசுக்கும் மோதல் உருவானது.தோற்கடிப்போம்
இது குறித்து நிருபர்களுக்கு ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்த பேட்டி: இது என்ன யாத்திரை? அதன் நேரத்தைப் பாருங்கள். அசாமில் ஒரு பெரிய வகுப்புவாத மோதலைத் தூண்டுவதற்கு அவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். கவுஹாத்தியில் நாங்கள் அதைப் பார்த்தோம். அசாமில் அசம்பாவிதம் எதுவும் நடக்க விடவில்லை. ராகுலிடம் சொல்ல விரும்புகிறேன். ராகுலின் ஆணவத்திற்கு லோக்சபா தேர்தலில் பதிலடி கொடுப்போம். இந்த உறுதிமொழியை நான் இன்று உங்களுக்குத் தருகிறேன். அசாமில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசை தோற்கடிப்போம். இதை அசாம் மக்கள் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
41 minutes ago
45 minutes ago | 1