உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,விற்கு முடிவு கட்டுவோம் போட்டா - ஜியோ கொந்தளிப்பு

தி.மு.க.,விற்கு முடிவு கட்டுவோம் போட்டா - ஜியோ கொந்தளிப்பு

சென்னை:''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு முடிவுகட்டும் கூட்டமாக நாங்கள் உள்ளோம்,'' என, 'போட்டா - ஜியோ' மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி கூறினார். அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'போட்டா - ஜியோ' சார்பில், 1-0 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பலமுறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும்' என்றார்.தி.மு.க., ஆட்சி அமைத்து, நான்கு ஆண்டுகளாகியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை; இது, வேதனையாக உள்ளது. நிதி இல்லை எனக்கூறி, தி.மு.க.,வினர் நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர். தற்போது பழைய ஓய்வூதியத்திற்கு ஒன்பது மாதம், சரண் விடுப்பிற்கு ஓராண்டு இலக்கு நிர்ணயித்து, ஐந்தாம் ஆண்டை ஓட்ட முதல்வர் முடிவு செய்துள்ளார். இத்தகைய போலியான அறிவிப்பினை, பட்ஜெட்டில் அறிவிக்காமல், தமிழக அரசு இருந்திருக்கலாம். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு முடிவு கட்டும் கூட்டமாக நாங்கள் உள்ளோம். தற்போது தலைமை செயலகம் உள்ளிட்ட, அனைத்து துறை அரசு ஊழியர்களும், தி.மு.க.,வுக்கு எதிராக, கடும் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, வரும் மானிய கோரிக்கையில், விதி 110ன் கீழ், பழைய ஓய்வூதியத்துடன் கூடிய சரண் விடுப்பு மற்றும், 21 மாத நிலுவை தொகையை அறிவிக்க வேண்டும். மானிய கோரிக்கையில், எங்கள் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வராவிட்டால், வரும், 25ம் தேதி ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Arjunan G
ஏப் 05, 2025 20:45

உறுதி கொடுத்ததை முதல்வர் மறந்துவிட்டாரா? நினைவு படுத்த வேண்டும்


P. ANTONY YESU (PON. DURAI)
ஏப் 05, 2025 12:31

ஏற்கெனவே ஆதிமுகவுக்கு முடிவுகட்டினீர்கள்... இப்பொழுது திமுகவிற்கு முடிவுகட்டுவீர்கள்...


G.Ranganathan
ஏப் 05, 2025 09:37

ஊழல். திமுக ஆட்சியைத் தோற்கடியுங்கள் ஆசிரியர்களே.


Udayasuryan
ஏப் 04, 2025 20:18

மக்களுக்கு நல்லது செய்யாத ஆட்சியை யார் விரும்புவார்கள்.


sridhar
ஏப் 04, 2025 19:52

தேர்தல் நேரத்தில் வால் தானாக ஆடும் .


Murugesan
ஏப் 04, 2025 18:24

திருட்டு திமுக ஊழியர்கள் ,ஏழை மக்களின் பணத்தில சுகபோகமாக வாழுகின்ற சுயநல அயோக்கியர்கள் ,திமுகவும் இவனுங்களும் தமிழகத்தின் சாபக்கேடு


Bhaskaran
ஏப் 04, 2025 15:06

இவங்க கொட்டத்தை அடக்கவாவது திமுக தனி மெஜாரிட்டி யில் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 04, 2025 16:50

எனுங்க இந்த ஜாக்கட்டா ஜியோ போக்கட்டா ஜியோ கும்பலை நீங்களுமா நம்புறீங்க, காசு கொடுத்து வேணுமினே இவங்களை கூவ சொல்லி இருப்பாங்க. இவங்க தலைவர் பேரை பாருங்க பீட்டர் ஆல்பர்ட் அந்தோணி சாமி. நிச்சயமா இவங்களாவது திமுகவை எதிர்க்கிறதாவது? இவங்க எல்லாம் முழு நேர திமுக ஊழியர்கள்.


M Ramachandran
ஏப் 04, 2025 11:10

உங்களுக்கும் பேப்பே உங்க அப்பாவுக்கும் பாட்டனுக்கு பேப்பே. எங்களிடம் அடித்த பணமுள்ளது அதைய வைத்து விளையாடி வெற்றி பெருவோம்


MUTHU
ஏப் 04, 2025 10:45

இந்த கொந்தளிப்பு எல்லாம் சும்மா. இந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முழு சுயநலவாதிகள். நாட்டை பற்றி சிறிதும் நல்லெண்ணம் இல்லாதவர்கள். ஊழல்வாதிகள் என்று தெரிந்தும் தங்களுக்கு ஊதியமே முக்கியம் என்று திமுகவிற்கு என்றென்றும் அனுதாபமாய் ஆதரவாய் இருப்பவர்கள்.


Yes your honor
ஏப் 04, 2025 10:42

அய்யயோ பூச்சாண்டி வருது ஓடு, ஓடு. இந்த வெத்து அறிக்கை வீணர்கள் உண்மையில் திமுகவின் கடைநிலை கொத்தடிமைகள். ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவை அனைத்து வகைகளிலும் ஆதரித்து தமிழகத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையும் இவர்களின் இந்த வெத்து அறிக்கையும் ஒரே போன்றது. மனநிலை பாதித்தவன்கூட நம்பமாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை