உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களின் வரலாற்றை காப்பாற்றுவோம்; ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!

கோவில்களின் வரலாற்றை காப்பாற்றுவோம்; ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களை, ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் வகையில், 'ஆலயம் காப்போம்' அமைப்பு சார்பில், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, 'ஆலயம் காப்போம்' அமைப்பின் இயக்குனர் விஜய்நாராயணன் கூறியதாவது: நீதிமன்றம் கூறிய அளவுகோல்களை விட்டுவிட்டு, வேறு சில அளவுகோல்களை பயன்படுத்தி, 'ஒரு கால பூஜை' திட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களை ஆகமமற்றவை என மாற்றியுள்ளனர். இது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.அறநிலையத் துறையின் வலைதளத்தில் ஆகமம் அல்லாத கோவில் குறித்த ஆட்சேபனையை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்த காணொளி வெளியிட்டுள்ளோம். இதை https://agama.aalayamkaappom.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.கோவில்களின் வரலாற்றை காப்பாற்ற, அனைவரும் அவசியம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேபனை தெரிவிக்க வழங்கப்பட்ட, 30 நாள் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Calcutta Shankar
செப் 19, 2026 13:47

Greetings,The Thirukarisanathar Temple located in Kalavai, Ranipet District, is an approximately 1,800-year-old temple. This temple was built by the kings of that period in accordance with Agama rules. Evidence for this is found in the stone inions present in the temple. The inion records are available at the Archaeology Department office located in Arcot.Further, Kumbabishekam of the temple was performed in 2015 according to Agama rules. Until 2023, while the temple was functioning under the administration of the hereditary trustee, daily abhishekam was performed through Sivayas in accordance with Agama rules. After the temple came under the administration of the Hindu Religious and Chari Endowments Department, no priest Kurukkal has been appointed for the temple.This is an ancient temple that was built following Agama rules and where pujas were being conducted.


GMM
செப் 16, 2026 12:57

ஆகம விதிகள் அறியாத அறநிலைய துறை அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிக்க கேட்பது நீச்சல் தெரியாதவன் நீந்த கற்று கொடுப்பது போன்றது. ஒரு வேளை நீதிமன்றம் போல் சிறப்பு அதிகாரம் அறநிலைய துறைக்கு உள்ளதா? அதுபோல் நீதிமன்ற அளவுகோல். தெய்வ வழிபாடு, பக்தி உள்ள பக்தர்கள் பணி. புத்தியுள்ள நபருக்கு பக்தி கட்டாயம் இல்லை.


தமிழ்வேள்
செப் 16, 2026 11:58

ஷண்மத பிரிவில் எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அது அதற்குரிய ஆகமம் படிதான் கட்டப்பட்டு தினசரி பக்ஷ மாத வார்ஷிக பூஜைகள் நடக்கும்..குல தெய்வ குடி தெய்வ கோவில்களிலும் அந்தந்த குடி/ குலத்தின் சடங்கு வழிபாட்டு முறைகள் வழக்கங்கள் பாரம்பரியம் படிதான் அனைத்தும் நடக்கும்.. அரசாங்கம் தனது இஷ்டத்துக்கு எதையும் செய்ய இயலாது..


ஆரூர் ரங்
செப் 16, 2026 11:26

சிறுசிறு குலதெய்வ ஆலயங்கள் ஆகம ஆலயங்களை ஒத்தவையல்ல. அவற்றில் தனியான மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் அரசு தலையிடுவதும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக ஆக்கும் திட்டத்தைத் திணித்து அமல்படுத்தவும் முயற்சிக்கக் கூடாது. அது சமூக பதற்றத்தை உண்டாக்கும். அவற்றின் நிர்வாகத்தை பக்தர்களே முடிவு செய்யட்டும்.


Rengaraj
செப் 16, 2026 11:15

சுமார் நூற்றைம்பது இருநூறு வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவில்கள் தினமும் ஆறுகால பூஜை நடக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஆகம விதிகளின் படியே கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். மக்களின் இடப்பெயர்வினாலும், நாளடைவில் பக்தர்கள் வராததாலும் வருமானம் இல்லை என்பதாலும் போதிய அர்ச்சகர்கள் இல்லாததாலும் பெரும்பாலான கோவில்களில் ஆறு கால பூஜைகள் குறைந்துவிட்டன இதைவைத்து அந்த கோவிலில் ஆகம விதிகளின் படி நடக்கவில்லை என்று முடிவு செய்யக்கூடாது. கோவிலின் தலவரலாறு தெரிந்து கொண்டு முடிவு எடுக்கவேண்டும். அல்லது தொல்லியல் துறையின் உதவியை நாடவேண்டும். ஆகம சாஸ்திர விற்பன்னர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும்.


V RAMASWAMY
செப் 16, 2026 08:45

அற நிலையத்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் - திருக்கோயில்கள் விஷயத்தில் முந்தைய அரசு கவனிக்கத்தவறிய, உதாசீனப்படுத்திய பல விஷயஙகளை சீரமைக்கும் பல திட்டங்களை செயல் படுத்த முனைந்ததற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள சில குறைபாடுகளையும் திருத்தியமக்கும் திட்டங்களையும் செயல்படுத்துமாறு வேண்டுகோள். 1. கர்நாடகாவிலுள்ள ஹிந்து கோயில்கள் சிறப்புமிக்க முறையில் பரிபாலிக்கப்படுகின்றன. சுத்தம், சுகாதாரம் முன்னிலை படுததுகிறார்கள். அதே போல தமிழக ஹிந்து கோயில்களிலும் அமுல்படுத்தவேண்டும்., 2. தமிழகத்தில் கிராம கோயிலகள் உட்பட பல திருக்கோயில்களும், திருக்குளங்களும், ஆக்கிரமிப்புகளுடனும் குப்பை கூளங்களுடமும் சிதிலமடைந்து சன்னிதிகளில் விளக்குக்ள் கூட ஏற்ற வசதியில்லா் அவல நிலையிலிருக்கின்றன, இவற்றை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதுப்பொலிவுடன் மிளிரச்செய்து பக்தர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியும், அமைதியும் பெற்று தரிசனம் செய்ய ஏதுவாக்கவேண்டும். 3. அநேகமாக எல்லா கோயில்களிலும் பக்தர்கள் கண்ட கண்ட இடங்களில் எண்ணெய் விளக்குகள் ஏற்றியும் விக்கிரகங்களை தொட்டும் புனிதம் கெடும் வகையில் செய்வதை நிறுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைத்து, ஒவ்வொரு சன்னிதியிலும் ஒரு வடிகட்டியும் புனலமைப்பும் கொண்ட டின்னோ பாத்திரமோ வைத்து அதில் மட்டுமே தங்கள் காணிக்கை எண்ணெய்/நெய்யை செலுத்தவேண்டும். திருவிளக்குகள் ஏற்ற எண்ணெய் தட்டுப்பாடிருக்காது, அதற்கான கோயில் சிலவும் இருக்காது/குறையும், சன்னிதிகளும் எண்ணெய் பிசுக்கு கூடிய சேறும் சகதியில்லாமல் சுத்தமாயிருக்கும். சூடம் சாம்பிராணி ஊதுபத்திகள் கொடுக்கவிரும்புவர்களுக்காக அதற்கென ஒரு கவுன்டரோ ஒரு கூடையோ வைத்து அதில் சேர்க்கும்படி வசதி செய்யலாம். இது பற்றீய அறிவிப்புப் பலகைகளும் அங்கங்கே வைக்கவேண்டும். பிரசாதங்களை திருக்கோயில் சன்னிதிகளிலேயே எச்சிலுடன் புசித்து தொன்னைகளையும், இலைத்தட்டுகளையும் எங்குவேண்டுமானாலும் வீசி எறீயும் நிலை மாற்றப்படவேண்டும். இதற்காக குப்பை தொட்டிகள் வைத்து நீர்க்குழாய் பொருத்தப்பட்ட தனி இடங்கள் ஒதுக்கலாம் . இதற்கான கண்டிப்பான உத்திரவுகளும் அறிவிப்பும் செய்யவேண்டும். இதனால், கோயிலும் சுத்தமாக இருக்கும், 4. பல கோயில்களில் அர்ச்சகர்கள் சம்பளமின்றியோ, குறைந்த வருமானத்திலோ கந்தல், அழுக்குடன் கூடிய உடைகளுடன் சேவை செய்யும் பரிதாப நிலையை மாற்றியமைத்து சம்பளம், ஓய்வூதியம், பென்ஷன், கிராசுவிடி, பிராவிடன்ட் பன்ட் முதலிய பணிச் சலுகைகளையும் வருடம் இர்ண்டு ஜோடி வேஷ்டி துண்டுகளும் அளித்து பழைய அரசால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அவர்களையும் அரசு பணியாளர்கள் நிலைக்கு உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பல கோயில்களில் பல மூத்த அர்ச்சகர்கள் உதவியாளர்கள் இல்லாமல் தனியாக தாங்களே முக்கி முனகி தண்ணீர் முதலிய அபிஷேக பொருட்கள் சேமிக்க பலப்பல சன்னிதிகளில் வழுக்கும் கருங்கல் படிகளில் ஏறி இறங்கி சோர்வடையும் நிலை மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு சன்னிதிகளிலும் தண்ணீர் கழிவு நீர்க் குழாய்கள் பொருத்தினால் சிரமங்கள் குறையும். 5. அனைத்து சன்னிதிகளிலுமுள்ள அழுக்கும் எண்ணெய் கலந்த கறையுமுள்ள திரைசீலை அடிக்கடி மாற்றப்பட்டு மிளிரும்படி செய்யவேண்டும். 6. மற்றொரு முக்கிய தேவை - கர்நாடக கோயில்களில் அர்ச்சகர்கள் விபூதி குங்கும கிண்ணங்களை தேவைப்படும் அளவுக்கே எடுத்துக்கொள்ளும் வசதிக்காக பக்தர்களுக்கு காண்பிக்கிறார்கள், இதனால் அந்த பிரசாதங்கள் வீணாவதையும் பக்கத்திலுள்ள சுவற்றிலோ தூணிலோ தடவி அசுத்தம் செய்யும் செய்லும் தடுக்கப்படும். 7. பல கோயில்களில் கொடுக்கப்படும் விபூதி குங்கும பிரசாதங்கள் ரசாயனக் கலவையாகத் தானிருக்கின்றன. அவற்றை அணியும் பலபபல பக்தர்களில் தோல்கள் பாதிக்கப்படுகின்றன். இவற்றை தடுத்து சுத்தம் சுகாதரத்துடன் தயார் செய்யப்படும் இயற்கை பொருட்களுடன் தயாரிக்கப்படும் விபூதி குங்கும பிரசாதங்கள் வாங்கி உபயயோகிக்கும் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். இவற்றையெல்லாம் பக்தர்கள் நலன்கள் கருதி ஏற்பாடுகள் செய்து அதற்கான சிலவுகள் போக மீதியுள்ள கோயில் வருமானத்தில் மட்டுமே பிற நலத்திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்தவேண்டும் புதிய அரசு இவற்றை செயல்படுத்தி பக்தர்கள் மனம் குளிர்ந்து ஆதரவு பெற ஆவன செய்யவேண்டும்.


B Bala
செப் 16, 2026 08:42

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் ஆகம முறைப்படியே நிர்மாணம் செய்யப்பட்டது. மேலும் அந்த கோவில்களில் கும்பாபிஷேகமும் ஆகம முறைப்படியே நடந்துள்ளது. ஆகையால் தற்போது நடைபெறுகிற பூஜை முறையை மட்டுமே கருத்தில் கொண்டு ஆகம கோவில்கள் அல்லது ஆகமம் அல்லாத கோவில்கள் என்று வகைப்படுத்துவது தவறான புரிதலை உண்டாக்கக்கூடும். மேலும் மாண்பமை நீதிமன்ற தீர்ப்பு கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்த தீர்ப்பளித்தது. மேலும் ஆகம வல்லுநர்கள் கருத்தையும் கேட்க வேண்டியதும் அவசியமானது


புதிய வீடியோ