உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க., கடிதம்

மாம்பழம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க., கடிதம்

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, வரும் ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பா.ம.க., இழந்துள்ளதால், மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு, பா.ம.க., கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில், 'தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தையே பா.ம.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்
ஜூன் 19, 2024 12:01

வேண்டுமானால் அன்னாசி பழம் சின்னம் கொடுக்கலாம்.


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 11:41

உங்களுக்கு பலாப்பயம் சின்னம் கிடைத்தாலும் பிஜேபியேட இருக்கும்வரைக்கும் வெற்றிகிடைக்காது


Kanagaraj M
ஜூன் 19, 2024 09:18

பிஜேபி கூட்டணியில் இருந்தால் எல்லாமே கிடைத்துவிடும்.


Anbuselvan
ஜூன் 19, 2024 12:13

அப்போ லோக் சபா தேர்தலில் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் அவர்களது சின்னமான பம்பரமும் பானையும் பெற்றனர், அவர்கள் பிஜேபி கூட்டணியிலா இருந்தார்கள்? சின்னம் கிடைக்காத கட்சி நாம் தமிழர் கட்சிதான் கடந்த தேர்தலில்.


Sampath Kumar
ஜூன் 19, 2024 08:47

நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் உங்க கட்சிக்கு வாக்கு இல்லை அதுனால மாநில கட்சி அந்தஸ்தை இழந்தாகி விட்டது அப்புறம் எப்படி உங்களுக்கு மாம்பழம் சின்னம் தருவார்கள் ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை