உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  3,000 மீனவர்களுக்கு விரைவில் லைப் ஜாக்கெட்

 3,000 மீனவர்களுக்கு விரைவில் லைப் ஜாக்கெட்

சென்னை: 'தமிழக நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 75 சதவீத மானியத்தில் வழங்க, 3,000 'லைப் ஜாக்கெட்டுகள்' தயார் நிலையில் உள்ளன' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடலில் மீன் பிடிக்கும் போது, படகு கவிழ்ந்து அல்லது தவறி விழுந்து, மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அதை தவிர்க்கும் வகையில், படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் 'லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு, 24,000 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஒரு படகிற்கு நான்கு லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒன்றின் விலை 2,472 ரூபாய். மானியத்தொகை 75 சதவீதம் போக, மீதி, 618 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 21,000 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மீனவர்களுக்கும் லைப் ஜாக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன; விரைவில் வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ