உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை

கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியின் போது கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் கோவையில் இருந்து திருப்பதி இண்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டையை கடந்து சென்று கொண்டிருந்தது. பயணத்தின் போது ரயிலில் உள்ள கழிவறைக்கு கர்ப்பிணி சென்றுள்ளார். அப்போது கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜூ என்பவன் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t58eybor&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை கண்ட அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கூச்சல் எழுப்பவே, ரயிலில் இருந்து அவரை ஹேமராஜூ கீழே தள்ளிவிட்டுள்ளான். பின்னர் அவர் தலையில் பலத்த காயத்துடன், கை, கால் முறிந்து போக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அதன் பின்னர் கர்ப்பிணி கொடுத்த தகவலின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், ஹேமராஜூவை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. பலகட்ட விசாரணைகளுக்கு பின்னர், ஹேமராஜூ குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. அவனுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தது. அதன்படி தீர்ப்பு விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. ஹேமராஜூக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்க வேண்டும்.வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும். இந்த தொகையை ரயில்வே சார்பில் ரூ.50 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சமும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 15, 2025 10:01

சிறையில் சூப்பர் டார்ச்சர் காத்திருக்கு. உள்ளே இருக்கிறவங்க வெச்சு செய்வாங்க.


Padmasridharan
ஜூலை 15, 2025 06:31

இந்த தீர்ப்பு மத்தவங்க குற்றம் செய்யாம இருக்கணுமே தவிர ஒரே ஒரு குற்றவாளிக்கு தண்டனையல்ல. ஆனால் இன்னும் குற்றங்கள் தொடர்கின்றன. அவை மறைக்கப்படவும் செய்கின்றனர் காக்கி சட்டை அரசதிகாரிகள் . அப்போ தவறு எங்கே நடக்கின்றது சாமி.


nisar ahmad
ஜூலை 14, 2025 22:56

சிறை தண்டனை ஓ கே இழப்பீடு ஏன் தமிழக அரசு தர வேண்டும் ஒன்று ரயில்வேதுறை முழுவதுமா தர வேண்டும் அல்லது ரயில்வே துறையை வைத்திருக்கும் ஒன்றிய அரசு தர வேண்டும்.ரயில்வேக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்மந்தமும் கீடையாது.


தெற்கத்தியான்
ஜூலை 14, 2025 19:45

இந்த தீர்ப்பு, தண்டனை கண்ணோட்டத்தில் சரியாகப் பட்டாலும், அபராதம்/நஷ்ட ஈடு ரயில்வே துறை மற்றும் தமிழக அரசு வழங்குவது என்பதெல்லாம் எடுபடாது. அவர்கள் எதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் நீதி அரசர் என்ற விளித்தலையே மாற்ற வேண்டும் மனம் போன போக்கில் கங்காரு கோர்ட் போல தீர்ப்புகள். இந்த வழக்கு மேல் கோர்ட்டுக்கு சென்றால், அபராதம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும்


Ramesh Sargam
ஜூலை 14, 2025 19:40

சாகும் வரை சிறை தண்டனை... இது தண்டனையா? சாகும் வரை மக்கள் வரிப்பணத்தில் சாப்பாடு, தங்க இடம். அதுதுதான் இது. தூக்குத்தண்டனை ஒன்றுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு மிகச்சரியான தண்டனையாக இருக்கும்.


சமீபத்திய செய்தி