வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் அருந்துவது இல்லை,போதை பொருட்களை உபயோகிப்பது இல்லை என்ற நிலைக்கு வராதவரை மதுக்கடைகளை மூடினாள் காவல் துறையில் உள்ள கயவர்கள் கள்ள சாராயத்திற்கு ஏற்பாடு செய்து ஆதாயம் அடைவர்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:உணர்வுபூர்வமான மதுவிலக்கு பிரச்னையில் கை வைத்துள்ளோம். இதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில், அக்., 2ல் வி.சி., மாநாடு நடத்துகிறது. இது, மற்ற மாநாடுகளை போல, சாதாரண மாநாடு என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துக் கட்சியினரும் மது விலக்கு வேண்டும் என்பர். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள, எல்லா முயற்சிகளையும் எடுப்பர். 'மது இருந்தால்; மதுக்கடைகள் இருந்தால் என்ன தவறு' என்று, ஒரு கட்சி கூட கூற வாய்ப்பே இல்லை. எல்லா கட்சிகளும் மது வேண்டாம்; போதைப் பொருள் வேண்டாம்; மதுவிலக்கு தேவை என்ற கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன; மது ஆலைகள் இயங்குகின்றன.எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது, இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது, ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். மத்திய அரசே, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு; மதுவிலக்கு சட்டத்தை இயற்று. தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு.மதுவை வைத்து வி.சி.,க்கள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் முருகன் கூறுவது தவறு. பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் இல்லை. குஜராத் மாநிலத்தில், காங்., ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. பீஹாரில் மது விலக்கிற்கு முதல்வர் நிதீஷ் குமார் காரணம். ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறும் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள், ஹிந்து சமூகத்தின் இளம் தலைமுறையினரை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மாநில அரசுகளின் மீது பழி போடுகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி., உள்ளது. ஆனாலும், அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் முக்கியமான மதுவிலக்கு பிரச்னையை கையில் எடுத்துள்ளது. அதற்கு காரணம், மதுவிலக்கு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்குமான பிரச்னை.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மக்கள் அருந்துவது இல்லை,போதை பொருட்களை உபயோகிப்பது இல்லை என்ற நிலைக்கு வராதவரை மதுக்கடைகளை மூடினாள் காவல் துறையில் உள்ள கயவர்கள் கள்ள சாராயத்திற்கு ஏற்பாடு செய்து ஆதாயம் அடைவர்.