உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் பட்டியல்

பெண்கள் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பெண்கள் பலாத்காரம் தொடர்பாக போக்சோ வழக்குகளில், பலர் கைதாகி உள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ

வாலிபரால் சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவருடன் சில மாதங்கள் முன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் அந்த வாலிபர் ஈடுபட்டார். சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனர்.

மாணவரால் மாணவி கர்ப்பம்

திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில், 15 வயது சிறுமி படித்து வந்தார். சிறுமியிடம் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவர் பழகி வந்தார். மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். பெற்றோர் கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஆய்வக உதவியாளர் கைது

சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் குமரேசன், 57, என்பவர், அறிவியல் ஆய்வக உதவியாளராக பணிபுரிகிறார். இவர், சில நாட்களுக்கு முன் பள்ளி ஆய்வகத்துக்கு வந்த மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் இளங்கோ அளித்த தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பள்ளியில் விசாரித்தனர். அதில், குமரேசன், மாணவியரிடம் சில்மிஷம் செய்தது உறுதியானது. இதையடுத்து இளங்கோ புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து, நேற்று முன்தினம் குமரேசனை கைது செய்தனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால், துறை நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிலாளி சிக்கினார்

மேட்டூர் அருகே உள்ள, 17 வயது மாணவியை, உறவினர் தொழிலாளியான செல்வராஜ், 35, கடந்த டிசம்பரில், மேட்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்து, செல்வராஜை நேற்று கைது செய்தனர்.

ஓவிய ஆசிரியர் கைது

கோவை, ரெட்பீல்ட்ஸ் பகுதியில் விமானப்படை பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் வடவள்ளி கோல்டன் நகரைச் சேர்ந்த ராஜன், 56, என்பவர், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் தன்னிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக, ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். முதல்வர் மாணவியிடம் விசாரணை நடத்திய பின், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அந்த ஆசிரியரை நேற்று கைது செய்தனர்.

மகளுக்கு தந்தை தொல்லை

ஈரோடு, ஆர்.என்.புதுார் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி, மனைவி, மகளுடன் வசிக்கும் பெயின்டர், தன், 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதையறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, தந்தையை கைது செய்தனர்.

மளிகை கடைக்காரர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 38, என்பவரின் மளிகைக்கடை அருகே, வாடகை வீட்டில், தன் பெற்றோருடன் வசிக்கும் 15 வயது மகள், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, மணிகண்டன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் தொல்லை அதிகரிக்கவே, தன் பெற்றோரிடம் அந்த சிறுமி கூறினார். திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.

முதியவருக்கு '20 ஆண்டு

துாத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை, வி. கழுகாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த மணி, 61, என்பவர் 2022ல் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட முதியவர் மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கண்ணன்
பிப் 20, 2025 11:41

அந்த “சார்” பெயரும்இடம் பெறுமா?


Yes your honor
பிப் 20, 2025 10:12

இன்றைய லிஸ்டில் ஆசிரியர் ஓகே டிக், சிறுமி ஓகே டிக், மளிகை கடை ஓகே டிக், இன்னொரு ஆசிரியர் ஓகே டிக், திருப்பூர், ஈரோடு, கோவை மற்ற மாவட்டங்கள் எங்கேப்பா? ஆறேழு கேஸ்தான் லிஸ்டில் உள்ளது மீதி தொள்ளாயிரத்து சொச்சம்? அப்புறம் இந்த அரசை யாராவது தப்பா நினைக்க மாட்டார்களா? கணக்கு கணக்கா இருக்கணும்.


orange தமிழன்
பிப் 20, 2025 09:49

தண்டனை கடுமையாக இல்லாததால் மீண்டும் மீண்டும் இச்சம்பவங்கள் நடக்கிறது.. இதை திராவிட அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டு லிஸ்ட் தருகிறார்கள்.. வெட்க கேடு.....இந்த லிஸ்டில் "SIR" இல்லையா


Shekar
பிப் 20, 2025 09:47

இன்றைய வானிலை, இன்றைய பெட்ரோல் விலை என்கிற ரேஞ்சுக்கு இந்த செய்திக்கும் தனி காலம் ஒதுக்கியுள்ளீர்கள். இது மட்டும் ஸ்காட்லாந்து டீம் அதிகாரிகள் அறிந்தால் நாளை முதல் ஒரு வழக்கும் பதிவாகாது. உங்கள் நோட்டீஸ் போர்டு காலியாதான் இருக்கும்


Sampath Kumar
பிப் 20, 2025 08:21

இதுக்கு என்ன காரணம்? கேட்டால் போதை கலாசாரம் என்பார்கள் அது மட்டுமில்ல மனிதன் ஒரு குரங்கு அவன் மாறவே இல்லை குரங்கு புத்தி அப்படியே உள்ளது


Shekar
பிப் 20, 2025 09:44

எல்லா குரங்கும் சார்கள் கொடுக்கும் தைரியத்தில் ஆடுகின்றன, திருந்தாத மக்கள் இருக்கும் வரை இந்த குரங்குகள் சார்களின் ஆசியோடு ஆடத்தான் செய்யும்


Kjp
பிப் 20, 2025 10:30

போதை கலாச்சாரம் தான்.போதையின் பாதையில் செல்லாமல் டாஸ்மாக் பாதையில் செல்லுங்கள்.


Padmasridharan
பிப் 20, 2025 07:54

பெண்பால் மட்டுமல்ல, ஆண்பால் பிள்ளைகளும் இதில் அடங்குவர். காவல்துறையில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் அறைக்கே அழைத்து செல்கின்றனர்.


பேசும் தமிழன்
பிப் 20, 2025 07:47

நேற்று.... இன்று..... நாளை என்று வானிலை அறிக்கை போல்.....பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் வருவது தான் விடியாத அரசின் சாதனை போல் தெரிகிறது.


Ray
பிப் 20, 2025 08:55

நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணின் பின்னும் ஒரு போலீஸ் போட வேண்டும் பெரிய இடத்து பெண்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு போடலாம்


Kjp
பிப் 20, 2025 09:30

ராய் அவர்களே ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் போலீஸ் போடவேண்டாம்.கடந்த நான்கு வருடங்களாக தமிழ் நாட்டில் போலீஸ் என்றால் பயம் கிடையாது.முதலில் போலீஸ்க்கு உரிய அதிகாரத்தை கொடுக்க சொல்லுங்கள்.


Barakat Ali
பிப் 20, 2025 10:39

ரே வழக்கம் போல உளரல் ....


Ray
பிப் 20, 2025 10:39

இன்னும் எத்தனைபேர் கைகாலை ஓடைக்கணும் எவனும் திருந்தலையே கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனைன்னு சட்டம் போட்டதை ஒடனே கையெழுத்து போட்டாரே ஆளுநர் இன்னும் ஒன்றுதான் பாக்கி முச்சந்தியில் நிறுத்தி சுட்டு தள்ளலாம் பாலியல் குற்றம் சாட்டப்பட்டால் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்படும்னு அமைச்சர் எச்சரித்துள்ளாரே நேற்று ஒரு ஆசிரியருக்கு ஆதரவா அவர் நிரபராதின்னு சாலை மறியல் நடத்துறாங்க அவர்மேல் கேஸ் கொடுத்தவர்களை சுளுக்கெடுக்கலாம் இந்த வகையான போக்கு அரசுக்கு எதிரானவர்களின் தூண்டுதலாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுகிறது


raj82
பிப் 20, 2025 07:33

This will be added to DMK files. No one will use


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை