உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூட்கேஸில் சிறுமி சடலம்; பெங்களூரு தம்பதி சுற்றிவளைப்பு

சூட்கேஸில் சிறுமி சடலம்; பெங்களூரு தம்பதி சுற்றிவளைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சங்ககிரி : வீட்டு வேலைக்கு வைத்த சிறுமியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைகுந்தத்தில் வீசிச்சென்ற விவகாரத்தில், பெங்களூருவில், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர்.இதுதொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியான, அபினேஷ்சாகு, 40, அஸ்வின்பட்டில், 37, ஆகியோரை சங்ககிரி போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய கார்களின் பதிவெண்கள், அப்பகுதியில் உள்ள மொபைல் போன் கோபுரத்தில் பதிவான எண்கள், சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர் அச்சிட்ட பிளாஸ்டிக் பையை வைத்து விசாரணை நடத்தினோம்.அதில், 114 கார்கள், அந்த சாலையில் குறிப்பிட்ட இரு நாட்களில் வந்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அங்கு பயன்படுத்திய மொபைல் எண்கள் குறித்தும் விசாரித்தோம். அனைவரும் வந்து சென்ற காரணத்தை சரியாக கூறினர். ஆனால், எஸ்.யு.வி., 300 மாடல் கொண்ட, கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட காரை ஓட்டி வந்த அபினேஷ்சாகு, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின் அவரது மொபைல் போனையும் அணைத்து விட்டார்.அந்த மொபைல் மூலம் யார், யாரிடம் பேசினார் என விசாரித்தோம். பின் ஒடிசாவில் இருந்த, அபினேஷ்சாகுவை, கடந்த, 26ல் பிடித்தோம். அவரது மனைவி அஸ்வின்பட்டிலை நேற்று தான் பிடித்தோம். அவர்களிடம் விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர், முன்ட்மால் பகுதியை சேர்ந்த சுமைனா, 15, என்ற சிறுமி, ஒடிசாவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார். அதை, அபினேஷ் சாகுவின் தந்தை நடத்துகிறார். இதனால் அச்சிறுமியை வீட்டு வேலைக்கு அபினேஷ் சாகு, பெங்களூரு அழைத்து வந்தார். அவர் சரியாக வேலை செய்யாத கோபத்தில், அஸ்வின்பட்டில், சிறுமி தலையில் தாக்கியுள்ளார். அதில் அவர் உயிரிழந்தார். இதனால் சடலத்தை சூட்கேஸில் அடைத்து எடுத்துவந்து, வைகுந்தத்தில் வீசிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Natchimuthu Chithiraisamy
நவ 05, 2024 13:40

நல்ல பணம் சம்பாதித்தால் கொலை செய்யலாம் பணம் கொடுத்தால் விடுதலை பெறலாம்


Indian
நவ 04, 2024 15:21

என்ன கொடூரம் , மனிதம் செத்து விட்டது ? பாவம் அநாதை பிள்ளை , இரக்கமே இல்லாதே கொடூரர்கள் ...இந்த பாவம் அவன் பல தலைமுறை தாக்கும் ..


Rasheel
அக் 31, 2024 11:03

மனிதம் செத்துவிட்டது.


sankaran
அக் 30, 2024 16:50

தன் வேலையாய் தானே செய்து பழகி கொள்ள வேண்டும் ... மேற்கத்திய நாடுகளில் சிறு வயதில் இருந்தே அதற்கு பழக்கி விடுகிறாரகள் ... நம் நாட்டில் தான் இந்த ஈகோ பிரச்னை ...


venugopal s
அக் 30, 2024 15:45

ஆஹா, என்ன ஒரு ஆச்சரியம், இதற்கும் இதுவரை தமிழக அரசையும் திராவிடத்தையும் யாரும் குற்றம் சொல்லாமல் இருக்கின்றனர்.எல்லா சங்கிகளும் திருந்தி நல்லவர்களாகி விட்டார்களா?


Sathyanarayanan Sathyasekaren
அக் 30, 2024 19:30

கொத்தடிமை வேணுகோபால். எது நடந்தாலும் மோடிஜியையும் பிஜேபியையும் குறை சொல்வது திருட்டு திராவிட கோபாலபுரம் கொத்தடிமைகள் வேலை.


தமிழ்வேள்
அக் 30, 2024 13:21

இவன் அப்பா நடத்தும் அநாதை ஆசிரமத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவேண்டும் ..என்னென்ன அட்டூழியங்கள் நடக்கின்றனவோ தெரியாது ...


Ramesh Sargam
அக் 30, 2024 12:36

வழக்கு பதிவு செய்து அது பல காலம் ஓடும். மிகவும் கொடூரமான தம்பதிகள். மரணதண்டனை ஒன்றுதான் இதற்கு தீர்ப்பு. அல்லது ஓடவிட்டு சுட்டுத்தள்ளுங்கள்.


சம்பா
அக் 30, 2024 11:10

என்கவுண்டர் தான் சரியான தீர்வ


Apposthalan samlin
அக் 30, 2024 10:55

இதுகளை எனகொண்டேர் போட்டால் இத்து போன மனித உரிமை ஆணையத்தில் பதில் சொல்ல முடியாது


The mechanic
அக் 30, 2024 10:42

Current life we are living like a psychopath, we r not living with real happiness, just acting only … bcoz stress, emi, ego, future plan, job security etc. etc. hiding behind the happiness, even family gatherings while we r think about that Also !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை