உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்கள் 213 பேருக்கு கடனுதவி

துாய்மை பணியாளர்கள் 213 பேருக்கு கடனுதவி

சென்னை:துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோராக மாற்றுவதற்காக, 219 துாய்மை பணியாளர்களுக்கு, நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்தி வாங்க, கடனுதவி வழங்குவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.துாய்மை பணியில் ஈடுபட்டுள்ள, எஸ்.சி., -- எஸ்.டி., வகுப்பினர், நேரடியாக கழிவுநீர் அகற்றும் பணி செய்வதை தவிர்க்க, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், 50 சதவீதம்; புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், இதர பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில், 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.இந்த வகையில், 213 பேருக்கு, 125.86 கோடி ரூபாய் மதிப்பில், 61.29 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி 213 துாய்மை பணியாளர்களுக்கு, நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்தி வாங்க கடனுதவிக்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக, ஐந்து பேருக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி