உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூரில் 2,000 ஏக்கரில் விமான நிலையம்; சூளகிரி தாலுகாவில் அமைக்க இடம் தேர்வு

ஓசூரில் 2,000 ஏக்கரில் விமான நிலையம்; சூளகிரி தாலுகாவில் அமைக்க இடம் தேர்வு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்து, முக்கிய தொழில் நகரமாக, ஓசூர் உருவெடுத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் அங்கு ஏற்கனவே, வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் உள்ள நிலையில், மின் வாகனம், பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் துவங்க முன்வந்துள்ளன. தற்போது, ஓசூருக்கு செல்லும் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரநிதிகள், கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு விமானத்தில் செல்கின்றனர். பின், அங்கிருந்து சாலை மார்க்கமாக, ஓசூர் செல்கின்றனர். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கும் அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின், 2024 ஜூனில் வெளியிட்டார். விமான நிலையம் அமைக்க, ஓசூருக்கு அருகில் உள்ள தனியார் விமான ஓடுபாதை, சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டையில் உள்ள தோகரை அக்ரஹாரம் உள்ளிட்ட, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அங்கு, ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. அதில், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி தாலுகாக்களில், இரு இடங்கள் தேர்வாகின. இந்த இரு இடங்களிலும், உயரமான கட்டடங்கள் அதிகமாக எங்கு உள்ளன என்பதை அறியும் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட பணி ஓசூர் விமான நிலையத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ள இரு இடங்களில், ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கிருஷ்ணகிரி - பெங்களூரு நெடுஞ்சாலையில், சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில், ஓசூர் விமான நிலையம் அமைக்க அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிப்பது உள்ளிட்ட, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jack
ஆக 24, 2025 21:22

ஜகத் பாலு தயாரிக்கும் சரக்குகளை ஏற்றுமதி செய்ய முடியுமா ?


GUNA SEKARAN
ஆக 24, 2025 09:34

திமுகவின் கொள்ளைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. ஜி ஸ்கொயர் காசா கிராண்டே பாஷ்யம் .......திமுக புள்ளிகள்.....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 24, 2025 08:24

ஓசூரில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் வருவதால் 2000 ஏக்கரில் புதிய விமான நிலையமாம் நடக்குமா? என்னவோ தினமும் 20-50 விமானம் தேவைப்பாடு அளவுக்கு முதலீட்டாளர்கள் வருகிறார்களா என்ன? ஒரு நாளைக்கு 10-20 நபர்கள் வருவார்களா என்பதே சந்தேகம். வெறும் 100 கிமீ தொலைவில் சூப்பர் டூப்பர் கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையமும், அங்கிருந்து கிட்டதட்ட ஓசூர் எல்லைவரை மெட்ரோ ரயில் போக்குவரத்தும், புத்தம்புதிய சென்னை பெங்களூர் ஆதி விரைவு தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. மேலும் பெங்களூர் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பணக்காரர்களும், முக்கியமான நிதி நிறுவனங்களும், கர்நாடகாவின் தலைநகருமான மெட்ரோபொலிட்டன் நகரம். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பெங்களூருவில் தங்கி அங்கேயே ஆலோசனைகளை முடித்து விடுவார்கள். அதிகபட்சம் தொழிற்சாலை விஜதீர்காக ஓசூர் வரக்கூடும். மற்றபடி ஓசூர் விஜயம் செய்ய முதலீட்டாளர்களுக்கு தேவையே இல்லை. இது கசப்பான உண்மை. இந்த நிலையில் ஒரு அத்துவான காட்டில் 2000 ஏக்கரில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொண்டுபோய் கொட்டுவது அறிவீனம். பெங்களூருவின் அருகாமையையும், அதன் வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு, அந்த பலஆயிரம் கோடிகளை புதிய தொழில்கள் துவங்க முதலீடு செய்ய வங்கிகள் மூலம் வழங்கி தொழில்முனைவோருக்கு உதவலாம்.


ஆரூர் ரங்
ஆக 24, 2025 11:43

முக்கியமாக ஏற்றுமதி சரக்குப் போக்குவரத்துக்கும் விமான நிலையம் தேவை.


Kasimani Baskaran
ஆக 24, 2025 05:02

பெங்களூரு இருப்பதால் அதன் அருகில் வளர்ச்சி தானே வருகிறது - திராவிடர்கள் கை வரிசையை காட்ட வசதியான இடமாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இல்லை என்றால் கமிஷன், கலெக்சன், கரச்சன் என்று திராவிடத்தொழில் ஆரம்பித்து இருப்பார்கள்.


முக்கிய வீடியோ