உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்: நீதிபதி கருத்து

கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்: நீதிபதி கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கூறியதாவது: இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kesavan
ஆக 09, 2024 19:39

எவன் இருந்தா என்ன எவன் செத்தா என்ன கோயிலுக்கு பூஜை நடக்கணும் இல்லன்னா சாமி கோபித்துக் கொள்ளும் சாமிக்கு கோபம் வருதா இல்லையோ அம்மா ஜி.ஆர். சாமிநாதனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துரும்


ayen
ஆக 09, 2024 14:07

தமிழ் நாட்டில் போதை புழக்கத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும் அது நீதி துறையிலும் புழங்க ஆரம்பித்திருப்பது சமீப காலமாக வரும் தீர்ப்புகள் உருதி படுத்துகின்றன.


M Ramachandran
ஆக 09, 2024 13:37

இந்த வாதமெல்லாம் செவிடேன் காதில் ஊதிய சங்கு


Sridhar
ஆக 09, 2024 13:33

எஜமான் ஒண்ணுமட்டும் புரியலீங்க. நீங்க சாமி இருக்காருங்கற கொள்கைக்கு ஆதரவா இருக்கீங்களா இல்ல ஹிந்துமத நம்பிக்கைப்படி சாமி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்ங்கற கொள்கைக்கு எதிரா இருக்கீங்களாங்கற விசயத்தை மட்டும் தெளிவாக்கிடுங்க. சாமியையே சிறைவைக்கமுடியும்னு அந்த ஆளுக்கு தெரிஞ்சிருந்துதுன்னா


Ramesh Sargam
ஆக 09, 2024 12:11

மேலும் ஹிந்து கோவிலை அதிக நாட்கள் பூட்டி வைத்திருந்தால், ஹிந்துக்கள் எதிரி திமுக அரசு அந்த கோவில் இடத்தை வேற்று மதத்தினருக்கு தாரைவார்த்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அதை நினைவில் கொண்டு சண்டையிடும் இரு சாராரும் ஒற்றுமையாக அந்த கோவிலை திறந்து பூஜை புனஸ்காரங்களை செய்வது நல்லது. இல்லையென்றால் முதலுக்கே மோசம்.


Kumar
ஆக 09, 2024 11:05

நீதிபதி தீர்ப்பு இப்படித்தான் இருக்கும். சட்டம் ஒழுங்கு கெட்டால் சரி என்கிறார்.


Narayanan Krishnamurthy
ஆக 09, 2024 11:49

சட்டம் ஒழுங்கு எவ்வாறு கெடும் சமூக விரோதிகளால் தான் அந்த சமூக விரோதிகளை எச்சரித்து காவல்துறை செயல் பட வேண்டும் கோயிலை பூட்டி வைத்து நம்பிக்கை உள்ளவர்களை தடுக்கக்கூடாது


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 10:52

கோவில் விஷயமா தகராறு வந்தா கோவிலை பூட்டுறதா? இதுதான் தீர்வா?? பிரச்னைக்கு தீர்வு கொடுக்க ஊர்ப்பெரியவங்க இருக்காங்க ... அறநிலையத்துறை இருக்கு .... போலீசு இருக்கு ..... திரா விடியால் மாடலுக்கு அறிவோ அறிவு ...


S.V.Srinivasan
ஆக 09, 2024 10:47

திராவிட மோல் ஆட்சில எந்த அளவுக்கு நீதி மன்றத்தின் உத்தரவுகளை மதிக்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.


Narayanan Krishnamurthy
ஆக 09, 2024 10:26

இது ஒரு சரியான தீர்ப்பு இந்த ஒரு கோயில் மட்டும் அல்ல பல புராதனமான கோயில்களும் எந்தவித பூஜை புனஸ்காரங்கள்இன்றி பாழடைந்த நிலையில் உள்ளன ஆதலால் அந்த கோயில்கள் உள்ளன ஊர் பகுதிகள் வளமின்றி இருக்கின்றன


அரவழகன்
ஆக 09, 2024 10:23

திராவிட மாடல் அரசு ஆட்சி நீதி மன்றத்தில் அடி வாங்குவது வழக்கமாகி வருகிறது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ