உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரருக்கு சிகிச்சை

லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரருக்கு சிகிச்சை

சிவகங்கை: திருப்புவனத்தில் போலீசாரால் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் நவீன் குமாரும் போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரை பைப்புகளை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கியது. அதுமட்டுமில்லாமல் அஜித் குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே, அஜித்தையும், தன்னையும் போலீசார் கொடூரமாக அடித்ததாக அவரது சகோதரர் நவீன் குமார் கூறியிருந்தார்.இந்த நிலையில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, போலீசார் தாக்கியதில் காலில் வலி ஏற்பட்டதாக கூறியதால், நவீனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் மாமா கூறினார். தொடர்ந்து, மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு, நவீன்குமார் வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Naga Subramanian
ஜூலை 07, 2025 08:57

100 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர் அநியாயமாக 27-வயதிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மனது கொதிக்கிறது


Ramesh Sargam
ஜூலை 06, 2025 22:13

அஜித் மரணத்திற்கு காரணமான காவலர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அல்லது ஜாமீன் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்களா? ஒரு செய்தியும் இல்லை. மக்களும் மறந்துவிட்டார்கள் அந்த கொடூர நிகழ்வை.


JaiRam
ஜூலை 06, 2025 22:03

பல வருடங்களுக்கு முன்பே உச்சநீதிமன்ற நீதி அரசர் கிஷ்ணாஐயர் கூறி இருக்கிறார் காவல் துறை என்பது காக்கி சட்டை போட்ட காட்டுமிராண்டிகள் கூட்டம் என


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 19:44

ஆஸ்பத்திரியிலும் தீயமுக ஆட்கள் இருக்கலாம். உஷார்.


sridhar
ஜூலை 06, 2025 19:38

ஆக , தைரியமா இருங்க , ஆக ..


Padmasridharan
ஜூலை 06, 2025 18:44

இந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமல்ல நிறைய பேரை அடிக்கச் செய்கிறார்கள். சட்டத்தை இவர்கள் கையிலெடுத்து அசிங்கமாக பேசி mobile ஐ புடுங்குவதும் பணத்தை கேட்டு வாங்குவதும் நடக்கின்றது


Mani . V
ஜூலை 06, 2025 17:54

என்ன பெரிய கருப்பா, அரசு வேலை கொடுத்து பிரச்சினையை திசை திருப்ப செய்த முயற்சி வீணாய் போய் விட்டதா?


rama adhavan
ஜூலை 06, 2025 17:41

கொலைகாரர்கள். கொடிய விலங்குகளை விடவும் கொடியவர்கள்.


D.Ambujavalli
ஜூலை 06, 2025 17:07

அரசுப்பணி லஞ்சம் கொடுத்து, அடித்ததை அமுக்கப்பார்த்தும், இன்று சகோதரருக்கு ஏதாவது என்றால் கேஸ் மேலும் தீவிரமடைந்து அரசுக்குப் பெரிய தலைவலியாக மாறும் நிலையும் உள்ளது.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 16:51

பேசாம அந்த கட்டப் பஞ்சாயத்து ஆஃபர் பண்ண 50 .லட்சத்தை வாங்கிகிட்டு சைலண்ட்டா ஒதுங்கியிருந்தா நிம்மதியா இருந்திருக்குமோ?. திராவிட மாடல் அரசில் என்றுமே நீதி கிடைக்காது. ஏமாற வேண்டாம். (கட்டப் பஞ்சாயத்து செஞ்ச உ.பி ஸ் கள் மீது இதுவரை FIR போட்டதா தெரியல. போடவும் மாட்டாங்க?)


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை