உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை தொகுதி பா.ஜ.,எம்.பி.,யை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார்.வருகிற 19 -ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் மதுரை எம்.பி.,தொகுதிக்கு பா.ஜ.,வை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தார். அவர் மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் இருந்து ரோடு ஷோவை துவக்கினார். வாகனப் பேரணி ஆவணி மூல வீதி வழியாக விளக்குதூணில் நிறைவடைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f22kk6mg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரோடு ஷோ துவங்கியது முதல் சாலையில் இருபுறமும் ஏராளமான பொது மக்கள் மற்றும் பா.ஜ.,வினர் அமித்ஷாவை வரவேற்றனர். கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களிடம் தாமரை சின்னத்தை காண்பித்தார் அமித்ஷா, தொண்டர்கள் தந்த தாமரை மாலை மற்றும் தொப்பியை வேட்பாளர் ராம சீனிவானனுக்கு அணிவித்தார்.

அமித்ஷாவுக்கு மதுரை ஆதினம் பொன்னாடை

அமித்ஷா,மதரை ஆதினத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினார். அதை தொடர்ந்து அமித்ஷாவிற்கு மாலை மற்றும் பொன்னாடை வழங்கி நினைவு பரிசு வழங்கினார் மதுரை ஆதினம்.ரோடு ஷோ நிறைவில் தமிழக வளர்ச்சி நலனில் அக்கறை செலுத்தும் கட்சி பா.ஜ.க., தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Palanisamy Sekar
ஏப் 12, 2024 20:49

எப்படி பார்த்தாலும் மதுரையில் மாபெரும் ஒரு புரட்சி நடந்தே தீரும் ஐந்தாண்டுகள் மதுரையில் வாழ்ந்த வகையில் சொல்கின்றேன் அங்கே பலரும் பேராசிரியருக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்று பரம்பரையாக திமுக வுக்கு வாக்களித்துவந்த ஓர் குடும்பம் தற்போது மாறிவிட்டது மோடி நன்றாக ஆட்சி செய்கின்றார், எதிர் அணியில் யார் பிரதமர் என்று கூட தெரியாமல் இருக்கும்போது உலகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய மோடிக்கே வாக்களிக்க போவதாக கூறினார்கள் இதுபோல பலரும் திமுகவை விட்டு விலகி மோடிஜிக்கு ஆதரவான போக்கை காணும்போது வாக்குகளை விலைபேசி விற்ற கம்யூனிஸ்ட் இந்த முறையோடு மதுரையில் காணாமல் போய்விடும் என்கிறார்கள் அமீத்ஷா கால் வைத்த இடத்தில எதிரிகள் இருப்பதில்லை என்பதுதான் அவரது ராசி


Mahendran Puru
ஏப் 13, 2024 01:43

மதுரையில் நல்ல வெயில்


vaiko
ஏப் 13, 2024 02:44

பேராசிரியர் தேர்தலில் டெபாசிட் போனவுடன் சிங்கப்பூருக்கு சென்று ஒருத்தரை கண்டுபிடித்து காலில் உள்ளதை கழட்டி அடிக்க போகின்றார்


Duruvesan
ஏப் 12, 2024 20:32

நோட்டா கட்சின்னு நேத்து வரை பேசினவர்கள் இன்னைக்கு நோட்டா கட்சியை பத்தி பேசலைனா தூங்க மாட்டார்கள் போல


sundarsvpr
ஏப் 12, 2024 19:51

முதலில் தினமலருக்கு வாழ்த்துக்கள் தேர்தல் நிலவரத்தை நடுநிலையோடு தெரிவிப்பதால் ஆனால் பல ஊடகங்களின் செய்திகள் பி ஜெ பி தனித்து போட்டியுடுவதால் அண்ணா தி மு க வின் வாக்குவங்கிகள் சிதறி நிலைதடுமாறுகிறது இந்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்வதால் தி மு க கட்சிக்கு எதிரான அண்ணா தி முக இரண்டாம் இடத்திற்கு வருமா என்ற சந்தேக கேள்விக்கணை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ