உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நட்சத்திர பிரசாரம் ஜொலிக்கலையே! வாக்காளர்களுக்கு ஒரே ஆறுதல் கமல் தான்

நட்சத்திர பிரசாரம் ஜொலிக்கலையே! வாக்காளர்களுக்கு ஒரே ஆறுதல் கமல் தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வெயிலின் தாக்கம் ஒரு பக்கம்; தேர்தல் பிரசாரம் மறுபக்கம் என, தமிழகமெங்கும் சூடு கிளப்பி வருகிறது.தேர்தல் என்றாலே பிரசாரப் பட்டியலில், திரைப்பட நடிகர்களின் பங்களிப்பு, ஒவ்வொரு கட்சியிலும் அதிகமாக இருக்கும். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடும். அதை வைத்து, தங்களுக்கான பலத்தை கட்சியினர் வெளிப்படுத்தி வந்தனர்.சட்டசபை தேர்தல் சமயத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருந்தபோது, அ.தி.மு.க., சார்பில் சிம்ரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அடுத்த தேர்தலில் பிரசாரம் செய்ய சிம்ரன் மறுத்து விட்டார்.விஜயகாந்த் குறித்து வடிவேலு பேசிய பேச்சு, திரைத்துறையில் இருந்தே அவரை ஒதுக்கி வைத்தது. 'மாமன்னன்' திரைப்படத்துக்கு பின், இனி சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று வடிவேல் அறிவித்தார்.இருந்தாலும் அவரை, பிரசாரம் செய்ய தி.மு.க., மேலிடம் அழைத்த போது கூட, வடிவேல் மறுத்து விட்டார்.சினிமாவில் நடிக்கப் போவது ஒரு காரணமாக இருந்தாலும், முன்னர் ஏற்படுத்திய காயம், இன்னமும் அவர் பாஷையில் சொல்லப் போனால்... 'எல்லாம் கண்ணு முன்னால வந்து போகும்ல...' என்பதால், மறுத்து விட்டார்.இவரது இடத்தை, சிரிப்பு நடிகர் கருணாஸை வைத்து நிரப்ப தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. 'இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, திருவாடனைக்கு என்ன செய்தார்' என எதிர்கேள்வி கேட்டு, மக்கள் மடக்கி வருகின்றனர்.அடுத்த கட்டமாக, தி.மு.க.,வின் பிரசாரத்துக்கான சினிமா நட்சத்திரமாக உதவப் போகிறவர் நடிகர் கமல் தான். இதற்கு பரிசாகத்தான் ஒரு ராஜ்யசபா இடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நான் தான் சகலகலா வல்லவன்' என்று திக்கெட்டும் பரவிய பாட்டுக்கும், இவரின் பிரசாரத்துக்கும், ஓட்டுக்கள் வழங்கியவர்கள் ஏராளம். தி.மு.க.,வுக்கு எதிராக, டார்ச் லைட்டால் 'டிவி'யை உடைத்தவர் என்பதால், இவரது ரசிகர்கள் அப்படியே தொண்டர்களாக இணைந்தது, கூடுதல் பலம்.இன்று தி.மு.க.,விடம் தஞ்சம் அடைந்திருப்பதால், தொண்டர்கள் பலர், மீண்டும் ரசிகர்களாக மாறிவிட்டனர்.மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு பின், மீண்டும் உயிர் பெற்றிருக்கிற பாடல்... 'கண்மணி அன்போடு காதலன்'. அதையே செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லி, வாக்காளர்களை கவர முயற்சிக்கிறார்.வாக்காளர்களுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல், கமல் தான். 'எனக்கு உண்டான காயம் எல்லாம் தன்னால ஆறிடும். அது என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரியல... எனக்கு ஒண்ணுமே ஆகறதுல்ல...'நீங்கள் சொன்னது தான் கமல் சார். கரெக்டா மேட்ச் ஆகுதுல்ல...ரஜினி ரசிகனின் வாய்ஸ்: நல்ல வேளை, எங்க தலீவரு தப்பிச்சாரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Veeraputhiran Balasubramoniam
ஏப் 05, 2024 11:56

இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும், நமது நம்பிக்கை நட்சத்திரம் விடியல் வெள்ளி உதயா இருக்கிறாரே முழு நேர பிரச்சார பீரங்கியாக


Godfather_Senior
ஏப் 05, 2024 19:55

இந்த வெத்து வெட்டு பிரச்சார பீரங்கி ஏதோ தைர்யம் இருந்தால் இப்போ சொல்லட்டுமே பார்க்கலாம் "சனாதனத்தை வேரறுப்பேன்" என்று காய்ச்சிப்புடுவாங்க திருடனுக்கு பிள்ளை மட்டுமில்லே, பேரனும்கூடவைக்கும், தெரிஞ்சிக்கங்க


Indian
ஏப் 05, 2024 11:54

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க கட்சி ஆரம்பித்து ஒரு ராஜ்யசபா சீட்ல சமாதானம் ஆவது என்பது மடுவிற்கும் மலைக்கும் உள்ள இடைவெளி


duruvasar
ஏப் 05, 2024 10:14

ஒரு பெருங்காய டப்பாவிற்க்கு தேவையில்லாத அளவுக்கதிகமான பில்டப் தான் இது


Kundalakesi
ஏப் 05, 2024 10:06

மக்கள் அதிமுக விற்கு ஒட்டு போடாமல் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பு தரணும்


தணி
ஏப் 05, 2024 08:32

ராஜ்யசபா சீட்டு என்கிற எலும்பு துண்டுக்கு இப்படி வாலாட்டி சுத்துறது தேவையா?? அவ்வளவு பதவி மோகம்!!!


பாமரன்
ஏப் 05, 2024 08:26

ஆக்சுவலா எந்த ஆக்டரையும் பீட் பண்ற மாதிரி போற எடத்துக்கு தகுந்த மாதிரி ட்ரெஸ் போட்டு எங்க தல கூத்து கட்ட ஆரம்பிச்சப்பவே மத்ததுக மூட்டை கட்டிட்டு போயாச்சு


R.MURALIKRISHNAN
ஏப் 05, 2024 08:18

சொந்த கட்சிக்கே உதவாத பேச்சு மற்ற கட்சிக்கு உதவவா போகிறது கமலுடையது கட்சி அல்ல, இப்போ அது மார்கெட்டிங் ஏஜன்ஜி இது அவர் பாக்கெட்டை நிரப்ப உதவுமே தவிர தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்க போவதில்லை


Nalla
ஏப் 05, 2024 08:04

மனிதர் உணர்ந்துகொள்ள இது சட்டசபை தேர்தல் அல்ல, அதையும் தாண்டி பாராளுமன்றமானது பா ராளுமன்றமானது


VENKATASUBRAMANIAN
ஏப் 05, 2024 07:54

கமலின் நிலைமை வடிவேலுக்கும் கீழே போய்விட்டது வெட்கமே இல்லையா


Srinivasan Narasimhan
ஏப் 05, 2024 07:20

உருப்படியான விஷயம் பொடுங்க


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ