உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் மோடி பிரதமரானால் வாரணாசியை தலைநகராக மாற்றுவார்களாம்!: வைகோ சொல்கிறார்

மீண்டும் மோடி பிரதமரானால் வாரணாசியை தலைநகராக மாற்றுவார்களாம்!: வைகோ சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: மீண்டும் மோடி பிரதமரானால், அவரின் தொகுதியான வாரணாசியை தலைநகராக மாற்றுவதாகவும், அரசியலமைப்பை மாற்றுவதாகவும் ஆமதாபாத்தில் இந்துத்துவா சக்திகள் பிரகடனம் எடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன். இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. அப்போது மோடி மீண்டும் பிரதமரானால், இந்திய அரசியல் சட்டம் அடியோடு மாற்றுவோம், அடுத்ததாக தலைநகரை வாரணாசிக்கு மாற்றுவோம் என 32 பக்கத்திற்கு ஒரு பிரகடனத்தை ஆமதாபாத்தில் இந்துத்துவா சக்திகள் வெளியிட்டன. இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். இத்தேர்தல் என்பது 2வது சுதந்திர போரை போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Balamurugan nithyanandam
ஏப் 12, 2024 15:22

கருமம் இவர் பேச்சை எல்லாம் கேட்க வேண்டி உள்ளது யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவரிடமே மணிடியிட்ட...


Ramamurthy Srinivasan
ஏப் 11, 2024 18:22

This man is quite old Due to very hot summar his mind is not functioning properly something bla bla


Narayanan
ஏப் 11, 2024 13:56

தலைநகரை ராமேஸ்வரத்திற்கு மாற்ற எண்ணி இருக்கிறார்களாம் இது எப்படி இருக்கு ??


Narayanan
ஏப் 11, 2024 13:52

இப்போ என்ன சொல்லுவீங்க ???


Narayanan
ஏப் 11, 2024 13:47

தலைநகரை மாற்றும் மத்திய அரசின் யோசனையை இந்திய கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னால் நம்பலாம் இந்திய கூட்டணியில் ஒருவன் நாசிக் என்கிறான், வைகோ வாரணாசி என்கிறான் இப்படி சொன்னால் நம்பக தன்மை போய்விடும் மொத்தத்தில் மக்களை குழப்பும் அரசியல் வியாதிகள் உள்ள இடம் இந்திய கூட்டணி


Bhakt
ஏப் 13, 2024 01:38

நீங்க சொல்றது "செல்லாதுசெல்லாது" / + Briyani + rs கொடுத்தா தான் செல்லும்


S.V.Srinivasan
ஏப் 11, 2024 12:20

தலைநகரை எங்கு மாற்றினால் உனக்கு எதுக்குய்யா நோகுது அறிவாலயம் வாசலில் கம்முன்னு உக்காந்திரு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 11, 2024 11:58

மதிப்பிற்குரிய திருவைகோ அவர்கள் கூட்டணி தர்மம் காரணமாக பல நல்ல சிபாரிசுகளை மோடியிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத சூழ்நிலை மோடியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தனது கோரிக்கைகளை தெரிவித்தால் மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவித்து கொள்வார்கள் ஆகவே மறைமுகமாக இது போல் கூறுகிறார் அப்படியே தலைநகரை வாரணாசிக்கு மாற்றுவதாக வைத்து கொண்டால் என்ன தவறு உள்ளது அது இந்தியாவில் தானே உள்ளது சைனாவில் இல்லையே உங்கள் மதிப்பிற்குரிய திரு ராகுல் காந்தி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெய்ஜிங் இருந்து தமிழகம் மூலமாக வரும் கட்டளைகள் படி தான் செயல்படுவார் அது ஒவ்வொரு இந்தியனுக்கும் கேவலம் அல்லவா ஆகவே இது நல்ல விஷயம் தான் டெல்லியிலும் காற்று மாசு குறையும் தலைநகரும் நாட்டின் மத்திய பகுதியில் அமையும்


S.V.Srinivasan
ஏப் 11, 2024 12:21

உரைக்காது


vijai
ஏப் 11, 2024 00:34

இதுக்கு பாவம் என்னமோ ஆயிப்போச்சு


தமிழ்வேள்
ஏப் 10, 2024 20:50

தமிழகம் மூன்று மாநிலங்கள் ஆக பிரிக்காமல் இருந்தால் இந்த மாதிரியான உளரல்களை நாயுடு காரு வின் திருவாயிலிருந்து கேட்டுத் தீர வேண்டிய கொடுமை தொடரும்நீ பேசு நாயக்கரே


krishnamurthy
ஏப் 11, 2024 06:51

பொய்யோ பொய்


பேசும் தமிழன்
ஏப் 10, 2024 18:43

புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்களுக்கு மறை கழண்டு விட்டது போல் தெரிகிறது.... ஆளாளுக்கு உளறி கொண்டு திரிகிறார்கள்..... நம்மவர் கமல் நாக்பூரை தலைநகராக மாற்றுவதாக கூறினார்.... இப்போ என்ன வைகோ காசியை தலைநகராக்கப்போவதாக கூறுகிறார்...... அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் போய் சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ