உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் ஆலோசனை நடத்தினார். அதில், கலெக்டர்கள், போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். துணை கமிஷனர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் ஆகியோரும் உடன் உள்ளனர். இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக,காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்தன.இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ராஜிவ் குமார் ஆலோசனை நடத்தினார். பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், மேலும் பல அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:38

இந்த தேர்தல் மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையை மேற்கொண்டு உயர்த்தும். வோட்டிங் மெஷின் செல்லாஓட்டுக்களை தடுக்கும். ஓட்டுப்பெட்டியை களவாடும் கும்பலை தடுக்கும். நீதி நேர்மையை நிலைநாட்டும். இந்தியப்பொருளாதாரத்தை வானுயர உயர்த்தும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 23, 2024 13:05

தேர்தல் தேதியை அபிஷியலா அறிவிக்கும் முன்னரே பிஹார் கூட போகாமே டுமீலு நாட்டுக்கு வர்றார் ....... விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேல அம்புட்டு நம்பிக்கை .......


sahayadhas
பிப் 23, 2024 13:02

அதான் EVM பாத்துகுமே நீங்க செலவுதான்.


ராஜா
பிப் 24, 2024 06:18

அப்போ புள்ளி கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றிகள் கூட அப்பிடித்தான் போல. ஆட தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்.


Indian
பிப் 23, 2024 12:18

உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் திரு சந்திரசூட் போல நேர்மையாக, தேர்தல் கமிஷனர் திரு ராஜிவ் குமார் அவர்களும் செயல்படுவார் என்று நம்புவோமாக.


ராஜா
பிப் 24, 2024 06:20

எப்பிடி ஈரோடு கிழக்கு, மதுரை திருமங்கலம், R.K. நகர் இடை தேர்தல் அளவுக்கு நேர்மையாக செய்யப்பட்டால் போதுமா?????


அப்புசாமி
பிப் 23, 2024 12:06

எனக்கென்னவோ தி.மு.க ஆட்சியை கலைச்சிட்டு மாநில தேர்தலையும் நடத்திருவாங்க போலிருக்கு கோவாலு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை