உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலைய துறை சார்பில் காதல் திருமணங்கள்: உதயநிதி

அறநிலைய துறை சார்பில் காதல் திருமணங்கள்: உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அறநிலைய துறையா, அன்பு நிலைய துறையா என்ற வகையில், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் அதிக அளவில் காதல் திருமணங்கள் நடத்தப்படுகின்றன,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். அறநிலைய துறை யில் உள்ள, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், 32 ஜோடி திருமணம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர்- - கற்பகாம்பாள் மண்டபத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் உதயநிதி, திருமணத்தை நடத்தி வைத்து பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அப்போது, மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது: என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மணமக்களிடம் பேசிய போது, அவர்கள் காதல் திருமணம் என தெரிவித்தனர். காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும். எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டும். பின்னர், பெண்ணின் அப்பா, அம்மா ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அதற்கு அடுத்து, பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லாரும் கிளம்பி வருவர். ஏதேனும் ஒரு பிரச்னையை இழுத்து விடுவர். அவர்கள் அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பின், பெண் முடியாது என்று மறுத்து விடுவார். இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து, இந்த திருமணங்கள் நடக்கின்றன. இங்கு நடக்கும் திருமணங்களில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்தான். இது அறநிலைய துறையா அல்லது அன்பு நிலைய துறையா என்ற வகையில், அதிக அளவில் காதல் திருமணங்கள் நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

மோகன்
செப் 22, 2025 14:19

இந்துக்களிடம் மட்டும் தான் காதல் திருமணம் நடக்கிறதா. மற்ற மதங்களிலும் காதலர்கள் இருக்கிறார்கள். இது போன்று காதல் திருமணங்களை சர்ச்சுலயும் மசூத்திலயும் செஞ்சு வைப்பியா.


panneer selvam
செப் 20, 2025 16:03

Who has given the right to spend Hindu Temple Hundi collections for Udainidhi / Sekar babu fancy projects ? Let them conduct marriage of people with their party fund or personal fund


Yasararafath
செப் 15, 2025 18:52

இந்த முகத்தில் காதலை வராது,


கூத்தாடி வாக்கியம்
செப் 15, 2025 15:44

அய்ய அய்ய அவனா இவன்


kumz rocks
செப் 15, 2025 15:31

இந்த ஹிந்துமத விரோதி இந்துக்களை மதமாற்றம் செய்யும் மாமா வேளையில் இறங்கிவிட்டான்


kumz rocks
செப் 15, 2025 15:16

தான் ஒரு தத்தி என்பதை அடிக்கடி ஞாபகபடுத்துகிறான் ஆமா அறநிலைத்துறை உன் சொத்தா


Prabu
செப் 15, 2025 13:08

முதலில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கும் தேவர் அல்லது வன்னியர் பையனுக்கும் காதல் திருமணம் நடத்தட்டும் பார்க்கலாம்


Ramesh Sargam
செப் 15, 2025 13:08

அறமே இல்லாத துறைக்கு அறநிலையத்துறை என்று பெயர். கோவில் வருமானங்களை கொள்ளையடித்து, இப்படி set-up திருமணங்கள் நடத்தி, கணக்கு காட்டுவதற்கு ஒரு வழி இந்த காதல் திருமணங்கள்.


Anand
செப் 15, 2025 12:31

கருமம் பிடிச்சவர்..


ram
செப் 15, 2025 12:28

மிக மிக மிக மோசமானவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை