உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தமிழகம்- இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mkuf4a9v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் இன்று முதல் டிச.,17ம் தேதி வரை மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (டிச.,12) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JOHNSON
டிச 11, 2024 22:16

இந்தபுயல்என்னபேயர்


MARI KUMAR
டிச 11, 2024 15:42

பெண்கள் புயல் கரை கடந்திருக்கிறது மறுபடியும் புயலா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை