உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் வந்தாச்சு காற்றழுத்த தாழ்வு பகுதி! தட்டித்தூக்க காத்திருக்கும் மழை

வங்கக்கடலில் வந்தாச்சு காற்றழுத்த தாழ்வு பகுதி! தட்டித்தூக்க காத்திருக்கும் மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, இன்று அதே இடத்தில நிலவி வருகிறது. அதன் எதிரொலியாக அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், வரக்கூடிய 2 நாட்களில் தமிழகம், இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pvdqe2hn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதி வரும் 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும். தாழ்வுப்பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீரபாண்டி,அலங்காநல்லூர்
நவ 11, 2024 19:25

எப்படிப் பட்ட புயலையும் எவ்வளவு மழையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் எங்கே அந்த மழையை மட்டும் பெய்ய சொல்லுங்கள் பார்ப்போம் என (இனிமேல் புயல்,மழை வராது என்ற நம்பிக்கையில்) சவால் விட்டு திராவிடமாடல் ஆட்சி நடத்தும் திராவிடனுகளுக்கு வானிலை ஆய்வு மையம் இப்படி அடிக்கடி வானிலை எச்சரிக்கை கொடுத்து அவனுக வயிற்றில் புளியை கரைத்தால் அவனுகளால எப்படி நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியும்? அதனால் வானிலை மையத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.


ramesh
நவ 11, 2024 19:58

ஏன் நாட்டுக்கு மழை வேண்டாம் என்று நினைக்கிறீர்களா .பருவ மழை தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது .இது வரை எந்த மழையும் இல்லை சிறு தூறலை தவிர .இப்படியே போனால் மிக பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் .குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில்


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:24

வானிலை மையத்திற்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் கூட நடத்துவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை