உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய் பேசுவது கைவந்த கலை: பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின்

பொய் பேசுவது கைவந்த கலை: பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில், நீலகிரி தொகுதி எம்.பி.,யான ராஜாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, கோடைக்கால விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட சிறுவர் - சிறுமியர், விளையாட்டு வீரர்களிடம் உரையாடி, 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டார்.பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: இந்திய ராணுவம், பாக்., பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை மிகச் சிறப்பாக இருந்தது. அதனால், தேசப்பற்றோடு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மாபெரும் பேரணி நடத்தினோம். பேரணி மிகச் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது. ஆனால், இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்லுார் ராஜு, கருத்து சொல்கிறேன் பேர்வழி என தேவையற்ற கருத்துகளை பேசி உளறி இருக்கிறார். அரசியலில் அவர் ஒரு கோமாளி. கோமாளித்தனமாக எதையாவது பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளார். 'பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்' என, ஆட்சிக்கு வருதற்கு முன் தெரிவித்தேன். தற்போது, 'எங்கள் நல்லாட்சிக்கு பொள்ளாச்சி சம்பவ தீர்ப்பு சாட்சியாக அமைந்துள்ளது. ஆனால், பழனிசாமி, 'இந்த தீர்ப்புக்கு நாங்கள் தான் காரணம்' எனக்கூறி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். பிரச்னை நடந்தது அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில். அதில் நியாயம் கிடைக்க, நானும், தி.மு.க.,வும் எவ்வளவு போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதெல்லாம் மக்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனாலும், பச்சையாக பொய் பேசுகிறார். அவர் சமீபத்தில் டில்லிக்கு சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனால், அமித் ஷாவை அவர் எதற்காக பார்த்தார் என நாட்டுக்கே தெரியும். அப்போது அது குறித்து வாய் திறக்காத பழனிசாமி, இப்போது, '100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்; மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி பெறுவதற்காக சந்தித்தேன்' என சொல்கிறார். பொய் பேசுவது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. பொய் பித்தலாட்டம் செய்வது அவருக்கு கைவந்த கலை. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், நோயாளிகளிடம் பேசினார். மருத்துவக் கல்லுாரியிலும் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Kjp
மே 15, 2025 13:35

எப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறீர்கள்.எடப்பாடி கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை.நீட் கல்வி கடன் ரத்து மாத மின் கட்டணம் பழைய ஓய்வூதியம் பெட்ரோல் விலை குறைப்பு கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் ஏகப்பட்ட பொய் வாக்குறுதிகள் உங்கள் நினைவில் வருகிறதா வரவில்லையா.


Shankar
மே 15, 2025 11:07

பொய்பேசுவதில் இவ்வுலகில் உங்களை மற்றும் உங்கள் கட்சியினரை மிஞ்ச யாரேனும் உண்டோ?


ஆரூர் ரங்
மே 15, 2025 10:58

பித்தலாட்டத்தின் பிறப்பிடம் கட்டுமரம் மற்றும் குரு அண்ணா. பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுக்க வசூலித்து வாயில் போட்டு கொண்டது குரு. தானாக வாங்கிய மோதிரத்தை அண்ணா பரிசாக அளித்ததாக பொய் புளுகி மேலே வந்தது கருணாநிதி. தானே கொண்டு வந்த மீத்தேன் திட்டம், ஜல்லிக்கட்டு தடை, நீட் சட்டம் போன்றவற்றை தானே எதிர்த்த போலி கூத்தாடி ஸ்டாலின். நீட் ஒழிப்பு ரகசியத்தை இன்னும் காப்பாற்றும் நடிகர் உதயா. இவங்க சொந்த பங்காளி எடப்பாடியை குறை கூறுவது நாடகம்.


Somu
மே 15, 2025 10:54

திமுக வின் குலத்தொலிலே பொய் பேசுவது தானே. நீட், மாணவர்களது கல்வி கட்டணம், இப்படி 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் தானே நீங்கள்.


Anand
மே 15, 2025 10:31

எந்நேரமும் நிலை கண்ணாடியை பார்த்து விமர்சிப்பது இவரோட பொழுதுபோக்கு ..


Haja Kuthubdeen
மே 15, 2025 10:25

எடப்பாடி பொள்ளாச்சி மட்டுமா சொன்னாரு...அப்பாவும் மகனும் நீட் விசயமா ரகசியம் இருக்குன்னு மக்களை ஏமாற்றினார்கள்னும் சொல்லி இருக்கார்...அதுக்கும் பதில் சொல்லுங்க ஐயா....


Haja Kuthubdeen
மே 15, 2025 10:22

என்ன பேசுறோம்.. உளறுரோம்னு தெரியாமலே உளறிவரார்? பொள்ளாச்சி விசயத்தில் அந்த கூட்டத்தை உள்ளே போட்டது..வழக்கு போட்டது அஇஅதிமுக... அதுவும் இல்லாம வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு போட்டதும் எடப்பாடி.. திமுக வழக்கம்போல இதில் அரசியல் லாபம் மட்டுமே பார்த்தது. தசிபிஐ விசாரித்த வழக்கில் திமுக எதுவும் செய்யல.. மக்கள் தெளிவாத்தான் இருக்காய்ங்க...


Narayanan
மே 15, 2025 10:01

எடப்பாடி ஆட்சியில் இருக்கும்போதே நீங்கள் பொய் பேச கற்றுக் கொடுக்க பயிற்சி அளித்ததாக அறிந்தோம். ஆக காமராஜர் ஐயா சொன்னமாதிரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். ஸ்டாலினுக்கு பொய்யே பேசத்தெரியாத மாதிரி மதுக்கடைகளை ஒரே கையெழுத்தில் ஒழிப்பேன் என்று பேசியவர்தானே. 4 ஆண்டுகள் கடந்தும் செய்தது என்ன? நீட் ஒழிப்பேன் என்றார். இப்போ கேட்டால் காங்கிரஸ் மத்தியில் வந்தால் செய்திருப்பபோம் என்கிறார் .


RAMAKRISHNAN NATESAN
மே 15, 2025 09:59

தெர்மோகோல் ஒரு கோமாளின்னா [நீட் செகண்ட் இயர் படிக்கிறீங்களாம்மா?] ன்னு மாணவிகளைக் கேட்டவர் எப்படி ?


தமிழ் மைந்தன்
மே 15, 2025 09:35

அரசியலில் அவர் ஒரு கோமாளி. கோமாளித்தனமாக எதையாவது பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளார்.இப்படி உங்களை நீங்களே விமா்சித்து கொண்டது உலகத்தில் இதுவே முதல் முறை


முக்கிய வீடியோ