மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
58 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 29
சென்னை:''காசநோயை விரைந்து கண்டறிவதற்கான அதிநவீன கருவிகள், 272 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 27.96 கோடி ரூபாய் மதிப்பிலான காசநோயை விரைந்து கண்டறிவதற்கான அதிநவீன கருவிகளை வழங்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:காசநோய் இல்லாத தமிழகமாக, 2025ம் ஆண்டுக்குள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'டிஜிட்டல் எக்ஸ்ரே' பொருத்தப்பட்ட வாகனங்கள் வாயிலாக, மாநிலம் முழுதும் தற்போது, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, கடந்தாண்டில், 97,000 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்பணியை மேலும் செம்மையாக்கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 27.96 கோடி ரூபாய் மதிப்பில், காசநோய் மூலக்கூறுகளைக் கண்டறியும் கருவி களை வழங்க உள்ளது. இவை, 272 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.இந்நிறுவனம் ஏற்கனவே, தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- மா.சுப்ரமணியன்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
வலி நிவாரண மருந்து பயன்பாட்டை தடுக்க முடியாது. தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல், மருந்துகள் விற்பனை செய்வது தடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கும் மருந்தகங்கள் மீது, '104' என்ற மருத்துவ சேவை எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
58 minutes ago | 2
3 hour(s) ago | 29