மேலும் செய்திகள்
காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
24-Jan-2025
சென்னை : 'மத்திய பா.ஜ., அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் ஆதரவாக, வரிச்சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என, அனைத்து பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை ஏற்றியுள்ளது, மத்திய அரசின் பட்ஜெட்.இதை எதிர்த்தும், தமிழகம், கேரளா என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து எதேச்சதிகாரமாக செயல்படும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், தமிழகம் முழுதும் மாநகரம், நகரம், பேரூர் உட்பட அனைத்து இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம், நாளை நடக்கும்.இதில், பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
24-Jan-2025