உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு போலீசாரை காவலில் வைக்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, அஜித்குமாரை, 2025 ஜூன் 27ல் தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். சி.பி.ஐ.,விசாரிக்கிறது. போலீஸ்காரர்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி கே. தாமோதரன் நேற்று விசாரித்தார். ராஜா உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகினர். அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதம்: சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரமேஷ்குமார் தற்போது மானாமதுரை இன்ஸ்பெக்டர். சிவகுமார், இளையராஜா சிவகங்கை டவுன் போலீசில் பணிபுரிகின்றனர். சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரையும் காவலில் எடுக்காமல் நியாயமான, சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியாது. வழக்கு முடிவடையும் வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சாட்சிகளை கலைக்கக்கூடும். ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு வாதிட்டார்.

குற்றச்சாட்டு

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சண்முகசுந்தரம், தனிப்படையை சட்டவிரோதமாக அமைத்துள்ளார். அவர்கள், அஜித்குமாரை சட்டவிரோதமாக காவலில் எடுப்பதற்கு ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜா உதவி செய்துள்ளனர். அஜித்குமார் இறந்த பின், அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காயமடைந்ததில் இறந்ததாகக்கூறி, பொய் புகாரை கண்ணன் அளித்ததாக, சி.பி.ஐ., தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொலையை மறைக்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்ததாக, ரமேஷ்குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது. சிவகுமார், இளையராஜா, திருப்புவனம் போலீசில் பொது நாட்குறிப்பு பதிவுகளை திருத்தியதாகவும், நிகிதா புகாரில், சிவகுமார் முன் தேதியிட்டு சி.எஸ்.ஆர்., பதிவை போலியாக உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் குற்றம் நடந்ததை மறைக்கும் நோக்கில், ஏற்கனவே ஆவணங்களில் பொய் பதிவுகளை உருவாக்க முயன்றுள்ளனர். அஜித்குமார் பெற்றோரிடம், உள்ளூர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உதவியுடன் டி.எஸ்.பி., சமரசம் ஏற்படுத்த முயன்றதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மொபைல் போன்களில் ஆதாரங்களை, 10 பேரும் அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜா சார்பில் இதுவரை ஜாமின் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் வெளியே இருந்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தவும், ஆதாரங்களை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜாவை செப்., 16 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R S BALA
செப் 15, 2026 07:27

அஜித் குமார் கதறிய குரல் இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது..


Mani . V
செப் 15, 2026 05:44

நாட்டியப் பேரொளி, நடன சிங்காரி நிகிதா மீது எந்தக் குற்றமும் இல்லைங்களா? எது அந்த ஹைகிளாஸ் மேடத்து மீது நடவடிக்கை எடுக்க முடியாதா? எடுத்தால் எல்லோருடைய விஷயமும் சந்தி சிரிக்குமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2026 12:38

காவல்துறை கவர்னருடைய அதிகாரத்தின்கீழ் செயல்பட வேண்டும் ..... அவருடைய உத்தரவைச் செயல்படுத்த உதவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் எஸ் பி இருக்கலாம் .... இல்லாவிட்டால் அது ஏவல் துறையாகத்தான் இருக்கும் .....


Raghavan
செப் 11, 2026 13:05

பொய் புகார் கொடுத்த நிகிதாவை ஏன் இன்னும் கைது பண்ணவில்லை. அவளின் பின்புலத்தில் யார் உள்ளனர். இவள் வலையில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் யார் யார்? இவளுக்கும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று சி பி ஐ புலன்விஜாரணை செய்யவேண்டும்.


God bless all.
செப் 11, 2026 10:57

வெட்கக்கேடு. படித்த, வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்படும் இங்கு, கொடூரமான, இரக்கமற்ற அரசு ஊழியர்களால் சக மனிதர்களை ஈவிரக்கமின்றி அடித்துக் கொல்லும் வழக்கம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. நாம் இன்னும் கற்கால மனநிலையில்தான் வாழ்கிறோமா? வளர்ச்சி என்றால் பெரிய கட்டிடங்கள், பெரிய கார்கள், பெரிய கருவிகள் என்று அர்த்தமல்ல. வளர்ச்சி என்றால், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலம், எங்கும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும், எங்கும் இணக்கமான மற்றும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் உறவுகள். இந்த அளவிலான வளர்ச்சியை நாம் அடைவோமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.


ருத்ரன்
செப் 11, 2026 10:30

அடித்து கொன்ற கான்ஸ்டபிள்கள் சிறையின் உள்ளே சரி. அடித்து சித்திரவதை செய்ய சொன்ன இன்ஸ்பெக்டர்கள் தற்போது காவலில். அதெல்லாம் இருக்கட்டுங்க. நகை காணவில்லை என்று புகார் அளித்த அந்த பெண்ணின் பின்புறம் உள்ள அரசியல்வாதி யார். ஏவியவனை காப்பாற்ற யார் யாரையோ பலியாக்குகிறார்கள் போல் தெரிகிறது.


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2026 09:53

விசாரணை என்ற பெயரில் போலீசார் வரம்பு மெரி வன்முறை இல் ஈடுபட கூடா து என் ரூ சட்டம் இருக்கிறதா? இல்லையா? தெளிவு படுத்துங்கள்.


Dum
செப் 11, 2026 09:53

Why not screw up that bitch nikita?


Krishna
செப் 11, 2026 09:08

UnBiased Judge Giving Excellent Judgement Upholding Peoples Human Rights& Against Gravely Power-Misusing MegaLooting Police Criminals incl LootSharing Useless Superiors. Arrest Defame Prosecute All on Fast Track Basis for Conviction Within 03months


sankaran
செப் 11, 2026 08:36

முதலில் 3rd டிகிரி விசாரிக்கும் முறை அபொலிஷ் பண்ண வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட lockup டெத் நடக்கின்றன போலீஸ் ஸ்டேஷனில்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை