உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!: பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்

மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!: பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்

திருப்புவனம்: காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர் என அவரது உறவினர் குற்றம்சாட்டி உள்ளார். இதனிடையே, பிரதே பரிசோதனையில் இடம்பெற்றுள்ளது குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அஜித்குமாரின் உறவினரான மனோஜ் பாபு கூறியதாவது: போலீஸ் விசாரணையின் போது அஜித்குமாரிடம் பேசிய போது, கஞ்சா வாடை வந்தது. கஞ்சா குடிக்க வைத்து தான் அடித்தனர். கஞ்சா வாடையை தெரிந்து கொண்ட நான், போலீசாரிடம், அஜித்குமார் போதையில் உள்ளாரா எனக்கேட்டேன். இல்லை என மறுத்தனர். நீங்கள் யார் என கேட்ட பிறகு அதற்கு பதில் கூறிய உடன் என்னை தள்ளி போகுமாறு கூறினர்.அஜித்குமார் தண்ணீர் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். பிறகு கொடுத்த போது மிளகாய்ப்பொடி கலந்து கொடுத்தனர். முகத்திலும் தடவினர். இதனை நானும் பார்த்தேன். பார்த்தேன் எனக்கூறுவதை விட அருகில் தான் இருந்தேன். அனைத்தும் மாட்டுக் கொட்டகையில் தான் நடந்தது. முதலுதவி செய்தேன். அவரது உயிர் போகும் வரை அருகில் தான் இருந்தேன். அவரது நாடித்துடிப்பை சோதனை செய்த போது நாடித்துடிப்பு இல்லை. மார்பில் கைவைத்து பார்த்தேன். அப்போதும் துடிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தற்போது இவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளன. 12 சிராய்ப்பு காயங்கள், ரத்தக்கட்டு உள்ளன. சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார். தலை கபாலத்தில் அடியும் உள்ளே மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டதாக அதில் உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 03, 2025 20:44

விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆம், தமிழகத்தில் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. அதுவும் எங்கே? காவல்துறையினரிடம். மாநில முதல்வருக்கு இதுபோன்று அவலங்கள், அட்டூழியங்கள் தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் நடப்பது வெட்கமாக இல்லை ?


rama adhavan
ஜூலை 03, 2025 20:21

போஸ்ட்க்குமோர்டெம் செய்யும்போது அவர் கஞ்சா சாப்பிட்டு இருந்தார் என இரத்தப் பரிசோதனையில் தெரியட்டும் என்று தான் இப்படி செய்து இருப்பார்கள். எப்படி போலீஸ்க்குக்கு கஞ்சா வந்தது? இப்படித்தான் எல்லா கஞ்சா வழக்குகளும், பறிமுதல்களும் இருக்கும் போல் இருக்கிறது.. முதலில் எல்லா காவல் நிலையங்களிலும் திடீர் திடீர் சோதனை நடத்தி கஞ்சா இருக்கிறதா என சோதிக்க வேண்டும்.


Veluvenkatesh
ஜூலை 03, 2025 19:57

இன்னும் என்ன தயக்கம், நீதிமன்றம் தலையிட்டு இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அரசியல் ரீதியாக தலையிட்ட நபர்களையும் கைது செய்து நீதி வழங்க வேண்டும். காவல் துறை தலைவர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். CBI விசாரணை இதை கண்டிப்பாக செய்யும் என்று எதிர்பார்க்கலாம்? குடி கெடுக்கும் இந்த அரசு எதுவும் செய்ய போவதில்லை.


Padmasridharan
ஜூலை 03, 2025 19:45

இதிலென்ன பரபரப்பு சாமி. இதத்தானே அவங்க பண்றாங்க. பணம் கொடுக்கிற குற்றவாளிய விட்டுட்டு மாட்டினவன போதைல இருந்து தப்பு பண்ணிட்டான்னு மாட்டிவிடறதுல கில்லாடி காக்கிச்சட்டைகளாச்சே...


Kasimani Baskaran
ஜூலை 03, 2025 19:17

கஞ்சா கட்சி ஆட்சியில் இருந்தால் வேறு என்ன கொடுப்பார்கள்..


சமீபத்திய செய்தி