| ADDED : டிச 21, 2024 12:24 AM
மதுரையில் இருந்து சென்னை மற்றும் துபாய்க்கு, தினசரி விமான சேவையை, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம், அடுத்தாண்டு மார்ச் 30ம் தேதி துவங்க முடிவு செய்துள்ளது.மதுரையில் இருந்து சென்னைக்கு, தினசரி இரவு 8:10 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9:25 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னையில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:45 மணிக்கு மதுரை சென்றடையும். இதேபோல், மதுரையில் இருந்து பகல் 12:10 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 3:20 மணிக்கு துபாய் சென்றடையும். துபாயில் இருந்து, அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், காலை 10:40 மணிக்கு மதுரை வந்தடையும்.இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. கூடுதல் விபரங்களை, www.spicejet.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.