உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''திட்டமிட்டபடி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் முடியும்,'' என, மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தெரிவித்தார்.மதுரை, தோப்பூரில், 221 ஏக்கர் பரப்பளவில் 2023 ஆக., 17ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட போது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என, 2024 மே 10ல் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், மே 20ல் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.எல் அண்டு டி நிறுவனம், அதிகாரப்பூர்வமாக கட்டுமான பணிகளை துவங்கியது. கட்டுமானத்தின் மொத்த திட்ட மதிப்பீடு 2,021 கோடி ரூபாய்.முதற்கட்டமாக மருத்துவக்கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகளை 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணிகளும் 33 மாதங்களில் முடிக்கப்படும். இதில், 2 லட்சத்து, 31,782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பிரிவு கட்டடங்களாக கட்டுமானம் நடைபெறும்.கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்து மதுரையில் எய்ம்ஸ் செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் கூறியதாவது:டெண்டர் வெளியிடும் போதே குறிப்பிடப்பட்டது போல முதற்கட்டமாக விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகள், 18 மாதங்களில் நிறைவு பெறும்; 2025 டிச.,ல் முதல்கட்ட பணி முடிந்த பின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடியாக இங்கு நடைபெறும்.முதற்கட்ட நிலையில், 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தயாராகி வருகிறது. மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு உட்பட அனைத்து நோய் சார்ந்த துறைகளும் அமைக்கப்படும்.இரண்டாம் கட்டத்தில், 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறும்போது, மதுரை அரசு மருத்துவமனையை போல சிறப்பு மருத்துவமனையாக செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
நவ 13, 2024 15:38

மதுரை அய்ய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியுமா ? அல்லது 18000 மாதங்களில் முடியுமா ? இன்னும் எத்தனைபேர் உறுதி மொழி கொடுப்பீர்கள் ? ஐயா யாராவது உண்மையை பேசுங்கள், பொய் ஜே பி யினர் போல கங்கணம் கட்டிக்கொண்டு, வாயை திறந்தாலே பொய்கள் தான், அதுவும் குட்டி முதல் பெருசு வரை எந்த வேறுபாடும் கிடையாது. பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள் ? இனி என்ன செய்தாலும் பொய் ஜே பி யை காப்பாற்ற ஆள் கிடையாது, அந்த அண்ணாமலைக்கும் சேர்த்துதான், புரிந்தால் சரி.


அப்பாவி
அக் 20, 2024 17:37

இல்லாத எய்ம்ஸுக்கு இவர் இயக்குனராம். இன்னும் 18 மாசமாகுமாம். நட்டா கிட்டே சொல்லுங்க. முருகருக்கு தெரியுமான்னு கேளுங்க.


பாலா
அக் 20, 2024 21:27

இல்லாத எய்ம்ஸில் மாணவர்களே படிக்கிறார்களே !!!


Sivagiri
அக் 20, 2024 13:04

எப்படியாவது என்ன பாடு பட்டாவது கட்டி முடிச்சிட்டாதான் தமிழ்நாட்டுக்கு நல்லது - - அடுத்து எந்த மந்திரியும் , எம் எல் ஏ வும் , அரெஸ்ட் பண்ற நேரத்துல , ஹார்ட்அட்டாக் , அது இதுன்னு புருடா விட்டுட்டு ஜிஹெச்-ல , பிரைவேட் ஆஸ்பத்திரியில் போயி படுத்துக்க முடியாது . . . எய்ம்சில போயி செக் பண்ணிட்டு நேரா புழலுக்கு கொண்டு போயிரலாம் , - - ஆனாலும் நம்ம திராவிட மாடல் அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வச்சிட்டாங்க - சென்னையில் கட்டாம , மதுரையில் போயி கட்ட வச்சிட்டாங்க . . . எப்படியாவது தப்பிச்சிரலாம்னு பார்த்தாலும் , ஈடி , ஐடி , சிபிஐ , விட மாட்டாங்க . . .


venugopal s
அக் 20, 2024 12:02

அடியே என்பதற்கு பெண்டாட்டி இல்லையாம், பிறக்கப் போகும் பிள்ளைக்குப் பெயர் வைத்தானாம். முதலில் எப்பொழுது கட்ட ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள், பிறகு முடிப்பதைப் பற்றி பேசலாம்!


venugopal s
அக் 20, 2024 12:00

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பதை அப்புறம் பார்க்கலாம், முதலில் எப்பொழுது கட்ட ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்!


ஆரூர் ரங்
அக் 20, 2024 10:37

அபத்தமான ப்ராஜக்ட். நிறுத்துங்க.


raja
அக் 20, 2024 10:16

செங்கல் திருடன் மேல் திருட்டு கேஸ் கொடுக்க முடியாதா....


அரசு
அக் 20, 2024 08:46

இதே பொய்யை எத்தனை வருடங்கள் தான் சொல்வீர்கள்?


Kasimani Baskaran
அக் 20, 2024 07:10

மாநில அரசின் தடங்கல்கள், பொய்யுரைகள், ஒத்துழையாமை போன்ற பல சிக்கல்களுக்குப்பின்னும் எய்ம்ஸ் வேலை நடப்பது மத்திய அரசின் செயல்பாடுதான் காரணம்.


Indian
அக் 20, 2024 07:56

வந்துட்டான் கருத்து எழுத ..வேற வேலையே கிடையாதா ???


raja
அக் 20, 2024 10:18

இதோ பார்ரா கூமுட்டை கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப பரம்பரை கொத்தடிமை கொதிக்கிரத...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை